வங்க தேசத்து இந்துக்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை!

”அசைவது உயிர்! அசைவற்றது உயிரற்றது!” என்னும் நிலைப்பாடு உண்மையற்றதாகும்! எது நிலைப்பெற்றிருக்கிறதோ அது உயிர் காரனமாகத்தான் நிலைப்பெறுகிறது! மலைகளும் பாறைகளும் மரங்களும் பிரதேசங்களும் உயிர் உள்ளவையே!

மனிதனுக்கு இருப்பதுபோல் தேசத்திற்கு உயிரும் சிந்தனையும் இருக்கிறது! எனவேதான் ஒரு பகுதியில் இருப்பவர்கள் ஒரு மாதிரியாகவும் இன்னொரு பகுதியில் இருப்பவர்கள் இன்னொரு மாதிரியும் சிந்திக்கிறார்கள் செயல்படுகிறார்கள்!

ஒரே உயிரான பாரத தேசத்தின் ஒரு பாகமான வங்காளத்தில்தான் நேதாஜியும் சுவாமி விவேகானந்தரும் ராமகிருஷ்ண பரம ஹம்சரும் தோன்றினர்! அது பாரதத்தின் வீரம் மற்றும் விவேகம் மிக்க பூமியாகும்! தமிழகத்தில் ஆழ்வார்கள் நாயன்மார்கள் வழிவந்த “பக்தி” என்னும் ஒற்றுமையை பிழவுப்படுத்துவதற்காக ஆரியம் திராவிடம் பிரிவினை வாதம் என ஆங்கிலேயர்கள் கருத்துருவாக்கம் செய்ததைப்போல வங்காளத்தில் மதமாற்றம், மதமாற்றத்தை தொடர்ந்து பிரிவினைவாதம் என்னும் கருத்துருவாக்கத்தை செய்து வெற்றியும் கண்டார்கள்!

இப்போது மேற்குவங்கம் கிழக்கு வங்கம் என தேசம் பிரிக்கப்பட்டுவிட்டது!

பிரிக்கப்பட்ட பின்பும் மதம் மாறாமல் எஞ்சியிருக்கும் கிழக்குவங்க இந்துக்கள் மதம்மாற நிர்பந்திக்கப்படுகிறார்கள்! அவர்கள் மதம்மாற மறுப்பதால் தாக்கப்படுகிறார்கள்! ஒரு மாத காலத்தில் 88 இடங்களில் இந்துக்களும் அவர்களின் கோயில்களும் தாக்கப்பட்டதாக அந்த நாட்டில் தற்காலிக அரசு நிர்வாகம் தெரிவிக்கிறது! இது குறைத்து சொல்லப்படும் எண்ணிக்கையாகும்! மதமாற்றத்திற்காக பெரும் தாக்குதலை அங்கு மதம் மாறியவர்கள் செய்கிறார்கள்!

இந்து மதமும் இந்து கலாச்சாரமும்தான் பாரத தேசத்தின் உயிராகும்! பாரத தேசத்தின் உயிரை பாதுகாக்கவேண்டியது பாரத அரசின் கடமையாகும்! ஒருவர் மதம்மாறினால் உன் எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிடுகிறது என்று வங்க தேசத்து சுவாமி விவேகானந்தர் சொன்னார்! அவர் சொன்னது 100 சதவிகிதம் உண்மை என இப்போதும் முன்பும் நாம் கிழக்கு வங்கத்திலும் நாடு முழுமையும் பார்க்கிறோம்!

ஒரு நோயை உடலைவிட்டு ஒழிப்பது என்பது அந்த நோய் கிருமியை அழிப்பது மட்டுமல்ல! அந்த நோய்கிருமியை உடலிலேயே உடலுக்கும் பாதிப்பின்றி வாழவைப்பதும் ஆகும்!

மதமாற்றம் என்பது நோய்கிருமியைப்போன்றதாகும்! தென்னைத்தோப்பில் அனைத்துவகை மரங்களும் செடிகளும் இருக்கலாம்! ஆனால் தென்னை மரங்களுக்கு பாதிப்பு இல்லாமல் அந்த செடிகள் இருத்தல் வேண்டும்! அந்த வகையில் வங்காள தேச இந்துக்களை காக்கவேண்டியது பாரத தேசத்தின் கடமையாகும்!

நாம் ஒவ்வொருவரும் பாரத தேசத்தின் அங்கம்தான்! எனவே அது நமது கடமையாகும்! நாடுமுழுமையும் இத்தகைய நோய் உள்ளது! ஆப்கானிஸ்தான் ஈரான் ஈராக் பாலச்தீனம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து பாரத தேசத்தில் பதிவு செய்து கொள்ளாமல் வாழ்பவர்கள் பாரதம் முழுமையும் பரவிக்கிடக்கிறார்கள்! இவர்கள் ஒரு மனிதனாக இருந்தாலும் தனித்தன்மையை அவர்களின் தாய்நாட்டு தொடர்போடு பின்பற்றுவதும், இங்குள்ள இந்துக்களோடு சேர்ந்து வாழ முடியாது தனிதேசம் தாருங்கள் என கோருவதும், புற்று நோய்க்கு இணையான செயலாகும்! தேர்தலில் ஓட்டுக்காக அவர்களை தாஜா செய்து பாதகம் விளைவிப்பது அரசியல்வாதிகளின் வாடிக்கையாக உள்ளது! பாரதத்தின் உயிருக்கு பலம்சேர்க்க முனைவோர் அரசியலிலும் ஆட்சியிலும் கவனம் செலுத்தி செயல்பட்டால் மட்டுமே நம் தேசத்தை காப்பாற்ற முடியும்!

பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் வெளியுறவு செயலாளர் ஒருவரை வங்காள தேசத்திற்கு அனுப்பி வைத்து எச்சரிக்கை விடுத்திருப்பது மன ஆறுதலை தருகிறது! தேவைப்பட்டால் நாம் ராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என்பது நமது கோரிக்கையாகும்!

– குமரிகிருஷ்ணன்

– பாரதிய ஜனதாகட்சி, பிரச்சாரப்பிரிவு மாநில தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வேலை வாய்ப்புத் திருவிழா – பி� ...

வேலை வாய்ப்புத் திருவிழா – பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்பு பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட ...

பஹல்காம் தாக்குதல் குறித்து பி� ...

பஹல்காம் தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம் ராகுல்காந்தி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு ...

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங� ...

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியை ...

ராகுல் காந்தி, கார்கேவால் தங்கள ...

ராகுல் காந்தி, கார்கேவால் தங்கள் கட்சியை கட்டுப்படுத்த முடியவில்லையா?- பாஜக எம்.பி. கேள்வி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு ...

இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் � ...

இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் மதம் மாறிய இந்துக்கள் – எச் ராஜா மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ...

திருமணத்தின் மூலம் இந்தியாவுக� ...

திருமணத்தின் மூலம் இந்தியாவுக்கு வந்த 5 லட்சம் பாகிஸ்தான் பெண்கள்: தீவிரவாதத்தின் புதுமுகம் ‘‘​பாகிஸ்​தானை சேர்ந்த 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பெண்​கள், திரு​மணத்​தின் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.