“பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை 45 நாட்களுக்கு மகா கும்பமேளா நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இந்திய புலம்பெயர்ந்தோர் இந்தியா வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம், பின்னர் மகா கும்பமேளா, அதன் பிறகு குடியரசு தினம். இது ஒரு வகையான திரிவேணி, இந்தியாவின் வளர்ச்சியுடனும் பாரம்பரியத்துடனும் இணைவதற்கான சிறந்த வாய்ப்பு.”
—நரேந்திர மோடி, பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளா 2025, ஒரு பெரிய, பாதுகாப்பான, ஆன்மீக நிகழ்வாக இருக்கும். சிறப்பாக இது நடப்பதை உறுதி செய்ய உத்தரபிரதேச அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. உலகெங்கிலும் இருந்து 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 45 நாள் திருவிழா, ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம், ஆன்மீக மரபுகளை வெளிப்படுத்தும்.
இதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான முயற்சிகளில் சில:
முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாடு
தற்காலிக நகர அமைப்பு: மகாகும்ப நகர் ஆயிரக்கணக்கான கூடாரங்கள், தங்குமிடங்களுடன் ஒரு தற்காலிக நகரமாக மாற்றப்பட்டு வருகிறது.
சாலைகள் மற்றும் பாலங்கள்: 92 சாலைகளை சீரமைத்தல், 17 முக்கிய சாலைகளை அழகுபடுத்தும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.
மேம்பட்ட கண்காணிப்பு:
*முக்கிய இடங்களில் 340 க்கும் மேற்பட்ட நிபுணர்களுடன் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூட்ட அடர்த்தி கண்காணிப்பு.
*வான்வழி கண்காணிப்புக்காக ஆயிரக்கணக்கான சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் .
*மேம்பட்ட பாதுகாப்பிற்காக நுழைவு புள்ளிகளில் முக அங்கீகார தொழில்நுட்பம்.
*தீ பாதுகாப்பு: 35 மீட்டர் உயரம், 30 மீட்டர் அகலம் வரை தீயை சமாளிக்கும் திறன் கொண்ட நான்கு ஆர்டிகுலேட்டிங் வாட்டர் டவர்களை (AWT) நிறுவுதல்.
*தீ தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.131 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
*நீருக்கடியில் ட்ரோன்கள்: முதல் முறையாக, 100 மீட்டர் வரை டைவ் செய்யும் திறன் கொண்ட நீருக்கடியில் ட்ரோன்கள் விழா நடைபெறும் பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்பை வழங்கும்.
*பாதுகாப்பு நடவடிக்கை:
கண்காணிப்புக்காக ஏஐ திறன்களுடன் 2700 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன
*முக அங்கீகார தொழில்நுட்பம்: மேம்பட்ட பாதுகாப்பிற்காக நுழைவு புள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது
*துணை ராணுவப் படையினர் உட்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்
*அறுவை சிகிச்சை, நோய் கண்டறியும் வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன
*ஒரே நேரத்தில் 200 பேருக்கு சிகிச்சை அளிக்கும் திறன் கொண்ட வசதி நிறுவப்படுகிறது
* வயதான யாத்ரீகர்கள், குழந்தைகளுக்கான பிரத்யேக சுகாதார முகாம்கள் நடத்தப்படும்.
* கங்கை, யமுனை நதிகளில் சுத்தமான தண்ணீரை உறுதி செய்வதற்காக 3 தற்காலிக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படுகின்றன.
*இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் பன்மொழி அடையாளங்கள், கலாச்சார நிகழ்ச்சிகளுடன் சர்வதேச பார்வையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விரிவான முயற்சிகள் மூலம், மகா கும்பமேளா 2025-ஐ, ஒரு மத நிகழ்வாக மட்டுமல்லாமல், ஆன்மீகம், கலாச்சாரம், பாதுகாப்பு, நிலைத்தன்மை, நவீனத்துவத்தின் உலகளாவிய கொண்டாட்டமாக இருக்கும்.
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |