பாரதிய ஜனதா மாநில மாநாடு, தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும்’ என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . “தாமரை சங்கமம்’ எனும் பாரதிய ஜனதாவின் 5தாவது மாநில மாநாடு, வரும் 28 , 29ம் தேதிகளில் மதுரையில் நடைபெறுகிறது .
இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்ததாவது : மத்தியிலும், மாநிலத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி என்பதை முன்நிறுத்தி, இம்மாநாடு நடத்தபட உள்ளது. இதை உணர்த்தும்வகையில், மாநாட்டின் அரங்கமுகப்பு, “பார்லிமென்ட்’ மற்றும் தமிழக சட்ட சபை கட்டிட வடிவில் வடிவமைக்கபட்டுள்ளது. ஒருலட்சம் பேருக்கு இருக்கை வசதியுடன், 2.5லட்சம் பேர் பங்கேற்கும் அளவிற்கு இட வசதி செய்யபட்டுள்ளது.
மாநாட்டை பாரதிய ஜனதா தேசிய தலைவர் நிதின்கட்காரி தொடங்கி வைக்கிறார். 28ம் தேதி மாலை நடக்கும் மாநாட்டு பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா, மூத்த தலைவர் அத்வானி உரையாற்றுகிறார். பாரதிய ஜனதா ஆட்சி புரியும் 9 மாநிலங்களில் ஏற்பட்டுவரும் வளர்ச்சிகள் குறித்து, மாநாட்டில் கண் காட்சி வைக்கப் படும்.
தமிழகத்தில் திராவிடகட்சிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு துவக்கமான மதுரை மாநாடு, தமிழக அரசியலில் பெரியதிருப்பத்தை ஏற்படுத்தும். என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.