அழியாத கலாச்சாரம் மற்றும் நவீனமய மாக்கலின் ஆலமரம்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் இந்தியாவின் அழிவில்லாத கலாச்சாரம் மற்றும் நவீன மயமாக்கலின் ஆலமரம்” என்று நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதப்பட்டுள்ளார்.

மேலும்  பேசியதாவது: நாட்டில் ஏழைப் பெற்றோர்களின் குழந்தைகளும் மருத்துவர்கள் ஆகவேண்டும் என்பதற்காக நாங்கள் தாய் மொழியில் கல்வி கற்கும் வசதியை ஏற்படுத்தினோம். மருத்துவக் கல்லூரிகளை இரட்டிப்பாக்கிய தோடு இல்லாமல், நாட்டில் செயல்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனைகளின் எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளோம். அதேபோல் மருத்துவக் கல்விக்கான இடங்களின் எண்ணிக்கைகளையும் இரட்டிப்பாக்கியுள்ளோம். தகுதிவாய்ந்த மருத்துவர்களை உருவாக்கி நாட்டு மக்களுக்கு சேவைசெய்வதே அரசின் குறிக்கோள்.

நமது அரசு, தாய்மொழியில் கல்விவழங்க வேண்டும் என்ற தைரியமான முடிவினை எடுத்துள்ளது. இது,பின்தங்கிய பிரிவினை சேர்ந்த மாணவர்களும் மருத்துவராக மாறும் வாய்ப்பினை வழங்குகிறது. சுதந்திரத்துக்கு பின்பு முதல் முறையாக இது நடந்துள்ளது. நாடு தனது பாரம்பரிய மருத்துவ அறிவுடன் புதுமையான மருத்துவ அறிவினை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது. நமது யோகா, ஆயுர் வேதம் உலகில் புதிய அடையாளத்தை உருவாக்கியுள்ளன.

ஆயுஷ்மான் பாரத் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் இலவசமருத்துவச் சேவையை பெறுகிறார்கள். ஆயிரக் கணக்கான ஜன் அவுசதி கேந்திரர்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பத்தினருக்கு குறைந்த விலையில் மருத்துகளை வழங்குகின்றனர். சுமார் 1,000 டயாலிசிஸ் மையங்கள் இலவசமாக டயாலிசிஸ் சிகிச்சைஅளித்து வருகிறது. இவை அனைத்தும் கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காத்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், கிராமங்களில் மக்கள் ஆரம்பசிகிச்சை மற்றும் மருத்துவர் ஆலோசனைகளைப் பெறும்வகையில், லட்சக்கணக்கான ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் திறக்கப்பட்டுள்ளன. இப்போது கிராமத்தில் உள்ளவர்கள் மருத்துவ சோதனைக்காக 1000 கி.மீ தூரம் செல்லவேண்டியது இல்லை. இவ்வாறு பிரதமர் பேசினார்.

அதேபோல் ஸ்மிருதி மந்திருக்கு சென்றதுகுறித்து பேசிய பிரதமர், “இன்று நாக்பூரில் உள்ள சேவாசங்கத்தின் புனித லட்சியத்தின் மற்றுமொரு விரிவாக்கத்துக்கு சாட்சிகளாக நாம்இருக்கிறோம். புனித ராஷ்ட்ரா யாக்யா சடங்கு நாளில் இங்கு வந்திருப்பது எனது பாக்கியம். சைத்ர சுக்ல பிரதிபடா நாளான இன்று சிறப்பான ஒருநாள். புனித நவராத்திரி இன்றிலிருந்து தொடங்குகிறது. இன்று நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் குடிபட்வா, உகாதி, நவ்ரேஜ் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த ஆண்டு ஆர்எஸ்எஸ் தனது நூறு ஆண்டு பயணத்தை நிறைவுசெய்கிறது. இந்த சிறப்பான நாளில் ஸ்மிருதி மந்திருக்கு செல்லும், டாக்டர் சாகேப் மற்றும் குருஜிக்கு அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

டாக்டரும் குருஜியும் நாட்டுக்கு புதியஆற்றலைக் கொடுத்தனர். 100 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கபட்ட சித்தாந்தத்தின் விதை, இன்று உலகின் முன்பு பெரியவிருட்சமாக வளர்ந்துள்ளது. கொள்கைகளும் மதிப்புகளும் இந்த மரத்திற்கு உயர்ந்த உயரத்தை கொடுத்துள்ளன. லட்சக் கணக்கான கரசேவகர்களே அதன் கிளைகள். இது சாதாரணமான மரமல்ல, இது ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம், இந்தியாவின் அழியாத கலாச்சாரம் மற்றும் நவீனமய மாக்கலின் ஆலமரம்” என்று தெரிவித்தார்

அதேபோல் தீக்ஷா பூமி சென்றது குறித்து பேசிய பிரதமர் மோடி, “இந்த ஆண்டு நாம் நமது அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை அடைகிறோம். அடுத்தமாதம் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாள் வருகிறது. இன்று நான் தீக்ஷா பூமிக்குச் சென்று பாபாசாகேப்பை வணங்கி அவரின் ஆசீர்வாதத்தினை பெற்றேன். இந்தமகத்தான தலைவர்களை வணங்கி நவராத்திரி மற்றும் பிற விழாக்களுக்கு எனது வாழ்த்தினை நாட்டுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...