பா.ஜ.கா மாநில மாநாடு தினமலரின் பார்வை

பா.ஜ.கா மாநில மாநாடு குறித்து தினமலர் பத்திரிக்கையில் வெளியானசெய்தி

அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாத மதுரையில், மாநாடு நடத்துவதை அன்று முதல் இன்று வரை, கட்சிகள் வாடிக்கையாக கொண்டுள்ளன. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., திருப்பரங்குன்றத்தில் மாநாட்டை நடத்தினார்.

விஜயகாந்த் இங்கு மாநாட்டை நடத்தி, தே.மு.தி.க.,வை துவக்கினார். சரத்குமாரின் சமத்துவ கட்சி, இங்கு நடந்த மாநாட்டில் அரசியல் இயக்கமானது. அந்த வரிசையில், பா.ஜ., ஐந்தாவது மாநில மாநாட்டை நடத்தியது.

கவர்ந்த கட்காரி:ஏப்., 28, 29ல் நடக்கவிருந்த மாநாடு, மழையால் மே 10, 11க்கு தள்ளி வைக்கப்பட்டதாக அறிவித்தாலும் கூட, மாநாட்டுப் பணிகளும் முடியாதது ஒரு காரணம். மாநாட்டின் முதல் நாள், மே 10ம் தேதி காலை, 6 மணி முதல் தொண்டர்கள் கூட்டம் பந்தலில் திரண்டது. தொண்டர்களை கண்டு தலைவர்கள் உற்சாகமுற்றனர். தலைவர்கள் தாமதமாக வந்ததையடுத்து காலை, 11.45 மணிவாக்கில் மாநாடு துவங்கியது. முதல் ஆளாக வந்த தேசிய தலைவர் நிதின்கட்காரி, கட்சிக்கொடியை ஏற்றி வைத்து, பேட்டரி காரில் தொண்டர்களை உற்சாகப்படுத்தியவாறு மேடைக்கு வந்தார். ஜனசங்க காலத்தில் உறுப்பினராக இருந்த, 25 முதியவர்களுக்கு அவரே பொன்னாடைகளை போர்த்தி, கவுரவித்தது மட்டுமின்றி, தன் பேச்சிலும் குறிப்பிட்டார். அவருக்கு பின் தேசிய செயலர் முரளிதரராவ் போன்றோர் பேசினர்.

உல்டா… புல்டா:மதிய உணவு நேரத்தில், மேடை ஏறிய வெங்கையா நாயுடு, அயர்ந்த தொண்டர்களை உசுப்பேற்றி விடுமளவுக்கு, எளிய ஆங்கிலத்தில் எதுகை மோனையில் ஒரு பிடிபிடித்தார். “யுனைடெட் புராகரசிவ் அலையன்ஸ்’ என்பதற்கு உல்டா, புல்டா அலையன்ஸ் என விளக்கம் கொடுக்க, பலத்த கைதட்டல். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும், பயங்கரவாதிகள் ஒழிக்கப்படுவர், பெண்களுக்கு சமஉரிமை, பிராந்திய மொழிகள், விவசாயத்திற்கு முன்னுரிமை, விவசாயத்திற்கு காப்பீடு என, அடுக்க ஒரே ஆரவார அலை.மாலையில் பேசிய சுஷ்மா, இலங்கை பயணம் குறித்து விவரித்தார். இலங்கைத் தமிழர்கள் ஒரே நாடாக இருக்க விரும்பும் நிலையில், இங்குள்ள கட்சிகள், பிரிவினையை ஏற்படுத்த விரும்புவதேன் என, கேள்வி எழுப்பினார். அவரை தொடர்ந்து, மூத்த தலைவர் அத்வானி பேசினார். ஜனசங்கம் முதல் தற்போதைய பாரதிய ஜனதா வளர்ச்சி குறித்து விளக்கினார்.

சியாமளா பிரசாத் முகர்ஜி, உபாத்யாயா, வாஜ்பாய் போன்ற தலைவர்களின் செயல் திட்டங்களால், இந்தளவு வளர்ச்சியை எட்டியதாக கூறிய அத்வானி, பா.ஜ., நாட்டில் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் இருக்கிறது என, பெருமிதம் தெரிவித்தார்.

அடுத்து, அதிரடியாக பேசுவார் என தொண்டர்கள் எதிர்பார்த்த வேளையில், மாநாடு வெற்றி பெற்றதற்காக பாராட்டு தெரிவிப்பதாகக் கூறி அமர்ந்தார்.மாநாடு வெற்றிக்காக, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனை மற்ற தலைவர்கள் பாராட்டினாலும், இது எல்லாம் தனக்கு திருப்தியளிக்கவில்லை… என்றைக்கு பா.ஜ., ஆட்சி தமிழகத்திலும், தாயகத்திலும் மலருகிறதோ அன்றைக்கு தான் மகிழ்ச்சி என குறிப்பிட்டார்.

மாறுபட்ட மாநாடு:தொண்டர்கள் அதிகம் இருந்தபோதும், அத்வானி போன்ற தலைவர்கள் வரும் போது, எந்த தள்ளுமுள்ளும் ஏற்படாத வகையில், கட்டுக்கோப்பு காத்தனர். மாநாட்டின் இரண்டாவது நாளாக நடந்த பொதுக்குழுவில், மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கண்காட்சி, ரத்த தானம், மருத்துவ முகாம், குழந்தைகள் காப்பகம், உணவுக்கூடங்கள் என, திராவிட கட்சிகளிலிருந்து சற்று வித்தியாசப்பட்டு, இம்மாநாடு அமைந்தது பாராட்டுக்குரியது. மாநாடு இடம் தேர்வு முதல் முடியும் வரை, மாநில நிர்வாகிகள் மோகன்ராஜுலு, சரவணபெருமாள், சுரேந் திரன் போன்றோர் அங்கேயே முகாமிட்டு, நிர்வாகிகளை முடுக்கியவாறு இருந்தனர்.””அரசியல் ஆதாயத்திற்கு அல்ல… அரசியல் மாற்றத்திற்கான மாநாடு,” என, பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாலும், லோக்சபா தேர்தலை மனதில் வைத்து நடத்தப்பட்டது.

நீண்ட நாட்களாக அயர்ந்த தொண்டர்களை, இம்மாநாடு உசுப்பேற்றியதையும் மறுப்பதற்கு இல்லை. இருப்பினும் மாநாட்டிற்கு வந்த கூட்டத்தை ஓட்டுகளாக மாற்றுவது, பா.ஜ.,வின் எதிர்கால நடவடிக்கைகளில் தான் உள்ளது. அதற்கான முயற்சிகளில் அக்கட்சி இறங்குமா?

நன்றி தினமலர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமை ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை ''முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிற ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா வரவேற்பு இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அத ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரெத்தினம் இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, ஜனாதிபதி ...

விண்வெளியில் சரித்திரம் படைத் ...

விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...