ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில், தென்ஆப்ரிக்கா, தென்கொரியா, மெக்சிகோ தலைவர்களுக்கு இந்திய கலைப்பொருட்களை பரிசாக வழங்கினார்.
ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த பரிசுப் பொருட்கள் குறித்த ருசிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடா நாட்டில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது, கனடா நாட்டு பிரதமர் மார்க் கார்னிக்கு பித்தளையால் செய்யப்பட்ட போதி மர சிலையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். கனடாவின் ஆளுநருக்கு வெள்ளியால் செய்யப்பட்ட பர்ஸையும் பரிசாக அளித்தார்.
இதேபோல், ராஜஸ்தானில் செய்யப்பட்ட மரத்தால் ஆன கலைப்பொருளை அல்பர்டா மாகாணத் தலைவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அந்நாட்டு துணைநிலை ஆளுநருக்கு தங்க இழைகளால் செய்யப்பட்ட பெட்டி அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் செய்யப்பட்ட நந்தி சிலை, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு அளிக்கப்பட்டது. கோனார்க் கோயில் சிற்பத்தின் மாதிரி ஜெர்மன் பிரதமருக்கும், மகாராஷ்டிராவில் செய்யப்பட்ட வெள்ளி குடுவை ஆஸ்திரேலிய பிரதமருக்கும் அளிக்கப்பட்டது
மூங்கிலில் செய்யப்பட்ட கப்பல் வடிவ கலைப் பொருள், பிரேசில் அதிபருக்கு இந்தியா சார்பில் பரிசாக வழங்கப்பட்டது. சத்தீஸ்கரில் கைவினைஞர்கள் உருவாக்கிய பித்தளை குதிரை சிலை தென்ஆப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோசாவுக்கு அளிக்கப்பட்டது. தென்கொரிய அதிபருக்கு மதுபானி வகை ஓவியத்தையும், மெக்சிகோ அதிபருக்கு வார்லி ரக ஓவியங்களையும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |