காசிக்கு நிகரான திருமுதுகுன்றம் பழமலைநாதர் திருக்கோயில்

நடு நாட்டு 22 சிவத்தலங்களுள் ஒன்பதாவது திருத்தலமாக அமைந்திருப்பது திருமுதுகுன்றமாகும். திருமுதுகுன்றம் முத்திதரும் தலங்களுள் ஒன்று. இந்தத் தலத்தில் இறப்பவரின் உயிரை இறைவன் தன் தொடை மீது கிடத்தி மந்திர உபதேசம் செய்ய இறைவி தன் முந்தானையால் வீசி இளைப்பாற்றுகிறாள் என்பதை கந்த புராண வழி நடைபடலப் பாடல் 13 தெரிவிக்கிறது.

 

பண்டைநாளிள் இந்தத் தலத்தில் உள்ளோர்கள் காசிக்குச் செல்வதில்லை என்ற நியதி இருந்திருக்கிறது . விருத்தகாசி எனும் இந்தத் திருமுதுகுன்றில் வழிபாடு செய்தாலே காசியில் செய்த புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பழ காலந்தொட்டு வந்திருக்கிறது . மேலும் இத்தலம்விட்டு காசியில் ஏகினும் இல்லைதவப்பயன் முத்தியும் இலையே என தலச் சுருக்கம் குறிப்பிடுகிறது .

கோயில் அமைப்புச் செய்திகள் :

பழமலைநாதர் கோயில் ஆகமவிதிப்படி அமைக்கபட்டதாகும் . இத்தலத்தை பெருமை சேர்க்கும் வகையில் ஐந்து பிரகாரம், ஐந்து நந்தி, ஐந்து கொடிமரம், ஐந்து தீர்த்தம், ஐந்து கோபுரம், என பழமலைநாதர் கோயிலில் (பஞ்சாட்சர மகிமை) சிறப்புற அமைந்துள்ளது. பழமலைநாதர் கிழக்குநோக்கி வீற்றிருந்து அருள்பாலித்து வருவதால் கிழக்கு வாயில் சிறப்புப் பெறுகிறது . கிழக்கு வாயிலில் முன்னாள் வெளியே இருபது கால் மண்டபம் உள்ளது . அதனை அடுத்து நூற்றுக்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபத்தின் தெற்கே பதினாறுகால் அமைப்புக் கொண்ட வேலைப் பாடுகள் நிறைந்த விபசித்து மண்டபம் உள்ளது. விபசித்து மண்டபத்தின் கீழ்ப்பால் அக்னி தீர்த்தம் படிக்கட்டுகளோடு அமைந்த நடைக்கிணறாக உள்ளது . அது தான் முருகனால் படைக்கப்பட்டது .

அடுத்து ஆழத்துப்பிள்ளையார் கோயில் உள்ளது . அதில் விநாயகர் ஆழத்தில் வீற்றிருப்பதால்ஆழத்துப்பிள்ளையர் எனவும் ஆழ்ந்து அகன்றுநுண்ணிய பொருளாய் உள்ளார் . ஆதலின் ஆழத்துப்பிள்ளையர் எனவும் பெயர் அமைந்தது என்பர் விநாயகருக்கு அறுபடை வீடு உண்டு . அந்த அறுபடைகளில் ஒன்று திருமுதுகுன்றம் ஆழத்து விநாயகர் ஆகும் . அடுத்து பெரிய நாயகர் சந்நதியில் பழமலைநாதர், அருகம்மை, இசைநாயகி, பெரியநாயகி, சோமாஸ்கந்தர் போன்ற உற்சவ சிலைகள் உள்ளன. மேலும் படிக லிங்;கம் ஒன்று உள்ளது . படிகலிங்கத்திற்கு அன்னாபிடேகம் துப தீப ஆராதனைகள் தினமும் இருவேளை நடைபெறும் .

அதற்கு அடுத்து, தென்மேற்கு பகுதியில் மாற்றுரைத்த விநாயகர் கிழக்கு நோக்கி எழந்தருளியுள்ளார் . இந்த விநாயகரின் துதிக்கை சிறிய அளவில் உள்ளது . இந்த விநாயகர் சுந்தரர் வரலாற்றோடு தொடர்புடையவர் ஆவார்.

தலமரம் :

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தலமரம் உண்டு. அது இயற்கை வழிபாட்டின் வளர்ந்தநிலை அதாவது பழமலைநாதர் கோயிலுக்குரிய தலமரம் வன்னிமரமாகும் . இந்த மரம்சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னாள் உள்ளது ஆகும் .

பழமலைநாதர் திருக்கோயில் தல அமைவிடம் :

திரு மனிமுத்தா நதியின் மேற்குக் கரையில் உள்ளது பழமலைநாதர் திருக்கோயில். கடலூர் மாவட்டத்தில் விழுப்புரம் – திருச்சி            இருப்புப்பாதையும் சேலம் – கடலூர் இருப்புப்பாதையும் கூடும் இடம்தான் பழமலை என்னும் திருமுதுகுன்றமாகும். விருத்தாசலம் சந்திப்பு  நிலையத்திலிருந்து 3 கி.மீ தெற்கிலும், விருத்தாசலம் நகர       இருப்புப்பாதை நிலையத்திலிருந்து 1 கி.மீ கிழக்கிலும், பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்தகோயில் கிழக்கு மேற்காக 200 மீட்டர் அளவும், தென் வடக்காக 132 மீட்டர் அளவும் கொண்டு ஏறத்தாழ 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. தில்லையம்பதி (சிதம்பரம்) திருக்கோயிலுக்கு 48 கி.மீ. மேற்கே உள்ளது இந்தத் திருத்தலம்.

பழமலைநாதர் திருக்கோயில் தலப்பெயர் விளக்கம் :

ஊர் பெயர்கள் இயற்கையோடு காணப்படுகின்றன. ஆலை, மலை, குன்று, கோடு, அசலம், சைலம், ஆகிய மலையின் பெயர்களைக்கொண்ட ஊர்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன. அவ்வாறு அமைந்த பெயர்களில் ஒன்றே திருமுதுகுன்றமாகும். மேலும் முதுகுன்றம், பழமலை என்னும் தமிழ் பெயர்கள் விருத்தாசலம் என்னும் வடசொல்லால் வழங்கி வருகிறது. விருத்தம் என்பது முதுமை பழமலை என்றும் அசலம் என்பது மலை குன்றும் என்றும் பொருள் கொள்ளப்பட்டுப் பழமலையை விருத்தாசலம் என வழக்கில் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...