1919 ஏப்ரல் 13ம் தேதி இந்தியாவின் கருப்புதினம்.ஆம் அன்றுதான் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது.ஆங்கிலேயர்களின் கணக்குப்படி 379 பேர் இறந்தனர்.அன்றைய இரவில் தீப்பந்த்துடனும்,அழுகையுடனும் மைதானத்தை சுற்றி வந்து இந்த படுகொலைக்கு காரணம்மான ப்ஞ்ஞாப் கவர்னர் மிக்கேல் ஒ டயர் ம்ற்றும் அதிகாரி ஜெனரல் டயர் ஆகியோரை பழிவாங்குவேன் என சபதம் செய்தான் இளைஞன் உத்தம் சிங்.
ப்ஞ்ஞாப் கவர்னர் மிக்கேல் ஒ டயர் ம்ற்றும் அதிகாரி ஜெனரல் டயர் இருவரும் இங்கிலாந்து சென்றுவிட்டனர்.இவர்களை பழி தீர்க்க வர்த்தக கப்பல் ஒன்றில் பணியில் சேர்ந்து 1921 தென் ஆப்பிரிக்கா சென்றார் உத்தம் சிங். 1923 ல் அங்கிருந்து லண்டன் சென்றார்.அங்கு தனது சீக்கிய மத அடையாளத்தை ம்றைத்து “ராம் முகம்மது சிங் ஆசாத்” என்று பெயர் மாற்றிக்கொண்டார். உணவகத்தில் எச்சில் தட்டுகழுவினார்,கூலி வேலைசெய்தார்,
பட்டினி கிடந்து பணம் சேகரித்து கைதுப்பாக்கி வாங்கினார்.இதனிடையே ஜெனரல் டயர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இற்ந்தான்.மீதம் இருந்த கவர்னர் மிக்கேல் ஒ டயர்யை கொல்ல தருணம் பார்த்திருந்தார் உத்தம் சிங்.
சரியான தருணம் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த 21 ஆண்டுகள் கழித்து 1940 மார்ச் 13 ம் தேதி அமைந்தது.ஒரு மேடையில் பேசிவிட்டு இறங்கும்போது அவனை சுட்டு தள்ளினார் உத்தம் சிங்.தூக்கு தண்டனை விதித்தது இங்கிலாந்து அரசு.என்னை தூக்கில் போட்டதும் இங்கிலாந்து ம்ண்ணிலேயே என்னை புதையுங்கள்.இத்தனை ஆண்டுகள் எங்கள் ம்ண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி ம்ண்ணை
ஒரு இந்தியன் நிரந்தரம்மாக அபகரித்துக்கொண்டான் என்பது ஒரு நீங்காத அவமானம்மாக உங்களுக்கு அமையட்டும் என்றார் உத்தம் சிங்.வழக்கம் போல் சுதந்திர இந்தியா உத்தம் சிங்கை கண்டு கொள்ளவில்லை.1971 ம் ஆண்டு திருமதி.இந்திராகாந்தி அவர்கள் உத்தம் சிங்கின் அஸ்தியை கொண்டுவரச்செய்து மரியாதை செய்தார்.
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.