இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் உணவு தானியங்கள் உற்பத்தி கிட்டத்தட்ட 50 % அதிகரித்திருக்கிறது . இருப்பினும் பாரத தேசத்தின் மக்கள் தொகையில் 21 % (25 கோடி பேர்) போதிய அளவு ஊட்டச் சத்தின்றி தவிப்பதாக அமெரிக்காவின் வாஷிங்டனை சேர்ந்த உணவு கொள்கை ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அது மேலும் தெரிவித்திருப்பதாவது ; தானிய கிடங்குகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. உணவு தானியங்களை சேமித்து வைக்க போதுமான இடவசதி இல்லாதால் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான பீரஜ் பட்நாயக் இது குறித்து கூறுகையில், “விவசாயிகளிடமிருந்து வாங்கும் உணவு தானியங்களை தேவை மிகுந்த ஏழைகளுக்கு போதிய அளவில் விநியோகிக்க முடியவில்லை. உணவு தானியங்களை சேமித்து வைக்கக் கூடிய சிறந்த இடம் பசியால் வாடும் மக்களின் வயிறுதான்” என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் தற்போதைய உணவுக் கொள்கை இரண்டு முக்கிய இலட்சியங்களைக் கொண்டிருக்கிறது. ஒன்று, விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவு தானியங்களை வெளிச்சந்தையை விட தொடர்ந்து நல்ல விலை கொடுத்து வாங்குவது. மற்றொன்று, இவ்வாறு வாங்கிய தானியங்களை சந்தை விலையைக் காட்டிலும் மிகவும் விலை குறைவாக ஏழை மக்களுக்கு வழங்குவது. இந்தக் கொள்கையால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 1,360 கோடி டாலர் (ரூ.75,480 கோடி) மானிய சுமை ஏற்படுகிறது. இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒரு சதவீதமாகும்.
இந்நிலையில் புதிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேலும் அதிக மக்களைக் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இதனால் மானியச் சுமை இரண்டு மடங்கிற்கு மேல் உயர்ந்து ரூ.2 லட்சம் கோடியாக உயரும். இதில் பெரும் பகுதி மேலும் அதிகமான உணவு தானியங்களை கொள்முதல் செய்வதற்காகவே செலவிடப்படும்.
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.