தேவாஸ் சாமுண்டேஸ்வரி ஆலயம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல ஆலயங்கள் பிரசித்தி பெற்றவை. இந்தூர்- போபாலுக்கு இடையே உஜ்ஜயினியின் அருகில் உள்ள தேவாஸ் என்ற மாவட்டத்தில் ஒரு உயரமான மலை மீது பிரசித்தி பெற்ற, சக்தி வாய்ந்த ஆலயமான சாமுண்டேஸ்வரி ஆலயம் அமைந்து உள்ளது. அந்த ஆலயத்தை சக்தி பீடங்களில் ஒன்றாகக்

கூறுகின்றனர். தஷ்யயாகத்தில் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போன சிவபெருமான் இறந்து போன மனைவியை தோளில் தூக்கிக் கொண்டு ஆடிக்கொண்டு உலகெங்கும் போன பொழுது அவருடைய கோபத்தை சாந்தப்படுத்த விஷ்ணுவானவர் அவள் உடலை தன் சுதர்சன சக்கிரத்தினை ஏவி வெட்டி விட அது 51 துண்டுகளாகி பல்வேறு இடங்களில் விழுந்த பொழுது அவை விழுந்த இடங்களில் தோன்றிய பல சக்திபீடங்களில் தேவாஸ் நகரில் மலை மீது உள்ள சாமுண்ட மாதா ஆலயமும் ஒன்றாம்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் உஜ்ஜயினியை ஆண்டு வந்த மாமன்னன் விக்ரமாதித்யனின் தம்பியான பர்த்த ஹரி என்பவர் இந்த ஆலயம் உள்ள மலை மீது தவம் செய்ய வந்தார்.அவர் நாத் என்ற சமூகத்தை சேர்ந்தவர், பெரிய மகான் என்பதினால் அவரை விசார் நாத்ஜீ என அன்புடன் அழைத்தனர். அவரை தரிசிக்க பலரும் அந்தமலைக்கு வந்து கொண்டு இருந்தனர்.அப்பொழுது அந்த மலையில் வாழ்ந்து வந்த நடகா சுரன் என்ற அசுரன் பர்த்த ஹரியை தரிசிக்க வந்தவர்களை தடுத்து துன்புறுத்தத் துவங்கினான். அதனால் மலையில் செல்ல மக்கள் பயந்தனர். ஆனால் அந்த அசுரனால் முனிவரான பர்த்த ஹரியை ஒன்றும் செய்ய முடியவில்லை. பர்த்த ஹரி அந்த இடம் சக்திபீடங்களில் ஒன்று என்பதைஉணர்ந்தார்.ஆகவே நடகா சுரனுடைய கொடுமைக்கு முடிவு கட்ட அவர் அந்த தேவியிடமே பிரார்தனை செய்தார்.அவர் செய்த கடுமையான தவத்தினால் மனம் மகிழ்ந்த தேவியும் அவர் முன் காட்சி தந்து அவரது வேண்டு கோள் என்ன என வினவினாள். அவர் நடகா சுரனின் தொல்லைகளை எடுத்துக் கூறி அவனிடம் இருந்து தம்மைக் காண வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்க, தேவியும் அந்த நடகா சுரனை அழித்து அவருடைய வேண்டு கோளை நிறை வேற்றினாள்.அந்த தேவி தான் சாமுண்டா என்கின்ற தேவியாக அந்த மலையில் இருப்பதாகக் கூறுகின்றர்.

பூமியில் இருந்து சுமார் 350 உயரத்தில் மலை மீது அமைந்துள்ள இரண்டு ஆலயத்தில்; இரண்டு தேவிகள் உள்ளனர். அவர்களில் பெரிய வள் துல்ஜா பவானி எனவும், சிறியவள் சாமுண்டா எனவும் பெயர் கொண்டு இருந்தனர்.ஆதார பூர்வமாக சாமுண்டி ஆலயதை நிறுவியவர் யார் என்ற விவரம் எங்குமே கிடைக்க வில்லை. சுமார் எட்டடிக்கும் உயரமான, கையில் பெரிய வாளை ஏந்திய நிலையில் உள்ள சாமுண்டி மாதாவின் சிலை மலையின் ஒரு குகையில் பதிந்துள்ள ஒரு பெரிய பாறையில் செதுக்கப்பட்டு உள்ளது. அந்த இருவரில் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்டவள் யார் எனத் தெரியவில்லை என்றாலும், ஆலயம் சாமுண்ட மாதா ஆலயம் என்ற பெயரையே கொண்டு உள்ளது. அது பல நூற்றாண்டுகளுக்கு முட்பட்ட ஆலயம் எனவும் அதை நிறுவியவர்கள் மராட்டிய வம்சத்தை சேர்நதவர்களாகவே இருந்திருக்க வேண்டும் எனவும் தெரிகின்றது. அதற்குக் காரணம் துல்ஜா பவானிக்கு மகாராஷ்டிராவில் சிவாஜி காலத்தில் ஆலயம் அமைந்து இருந்திருக்கின்றது. சிவாஜி பவானி தேவியின் பக்தர்.தேவாஸ் அடங்கிய மால்வா என்ற பகுதியை ஆண்டவர்கள் மராட்டிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.

பவானி என்றால் வாழ்வு கொடுப்பவள், எண்ணங்களுக்கு வலிமை தருபவள் என்ற அர்த்தம் உள்ளதாகவும், அவளை கருணா ஸ்வருபினி என்று அதாவது கருணை மிக்கவள் என்ற அர்த்தம் தரும் பெயரைக் கொண்டவள் எனவும் கூறுகின்றனர். துல்ஜா பவானி என்பவள் பார்வதியின் மற்றொரு அவதாரமானவள். பவானியை பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மராதா மன்னன் சிவாஜி ஆராதனை செய்து வந்தார். 1864ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் மால்வா பகுதியை உள்ளடக்கிய தார் என்ற பகுதியை ஆண்டு வந்த அவருடைய வம்சாவளியில் வந்த நாராயணபவார் என்ற மன்னன், பவானியை ‘மகா காளி, மகாலஷ்மி மற்றும் மகா சரஸ்வதி;, திரைலோக சுந்தரி எனவும் போற்றிப் புகழ்ந்து ஒரு தோத்திரம் பாடி உள்ளதினால் தேவாஸ் நகரில் துல்ஜா பவானிக்கு ஆலயத்தை அவரே நிறுவி இருக்கலாம் எனவும் ஒரு பிரிவினர் நம்புகின்றனர்.

ஆலயத்தில் உள்ள இரண்டு தேவிகளும் சகோதரிகள். பல பக்தர்களும் அங்கு மலையேறி வந்து அவர்களை வணங்கி வந்தனர். அப்படி வரும் பக்தர்கள் முதலில் எவரை வந்து வணங்க வேண்டும் எனபதில் விவாதம் ஏற்பட அதனால் இரு சகோதரிகளுக்கும் சண்டை ஏற்பட்டதாம். இளையவளினால் மூத்தவளுடன் ஒத்துப் போக முடியாமல் போனதினால் கோபமுற்று மலையை பிளந்து கொண்டு வடக்கு நோக்கிச் சென்றாளாம். ஆனால் அவள் மலையை விட்டு வெளியில் போகக் கூடாது எனவும், தனித் தனியே இருந்தாலும் அவர்கள் பக்தர்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு அந்தமலையிலேயே தங்கி இருந்து கொண்டு அவர்களைக் காத்தருள வேண்டும் என விண்ணப்பித்துக் கொண்டு கிளம்பிச் சென்ற இளைய சகோதரியை அனுமான் தடுத்து நிறுத்தினாராம். அதை ஏற்றுக் கொண்ட சாமுண்டி தேவியும் வடப்புறத்தில் இருந்த குகையில் சென்று தங்கிவிட்டாள்.மூத்த சகோதரியான துல்ஜா தேவி என்றும் போல தெற்குப் புறத்தில் வசிக்கலானாள். அதனால் தான் சாமுண்டியை வணங்கிய நிலையில் உள்ள அனுமான் சிலைமலையில் உள்ளது. சாமுண்டி தேவி மலையை பிளந்து கொண்டு சென்றதினால் தான்அந்த குகையின் பின்புறம் பாறையில் பெரிய பிளவு உள்ளது.

அதுபோல இரண்டாகப் பிளவு பட்டிருந்த தேவாஸ் நகர இளைய மற்றும் மூத்த மகராஜாக்களுக்கும் அந்த இரண்டு சகோதரிகளும் இரண்டு பிரிவான இராஜ்ய தேவிகளாயினர்.மூத்தவரான துக்கோஜி ராவ்பவார் என்பவர்; சாமுண்டி தேவியை வணங்கத் துவங்க, இளைய மகாராஜா வானஜீ வாஜி ராவ் பவார் என்பவர் மூத்த சகோதரியான துல்ஜா பவானியை இஷ்ட தெய்வமாக்கிக் கொண்டார். அது மட்டும் அல்ல அந்த இரண்டு மகா ராஜாக்களும் அவரவர் சமஸ்தானத்தில் இருந்த மக்கள் இராஜ்ய தேவியை பூஜிக்க மலைக்கு செல்வதற்கு வசதியாக தனித் தனியான மலை வழிப் பாதையை அமைத்தனர். அதனால் மலைக்குச் செல்ல இரண்டு பாதைகள் ஏற்பட்டன. அது மட்டும் அல்ல தேவாஸ் நகரத்துக்குள்லேயே தடுப்புச்சுவர் எழுப்பப்படாமல் வைத்திருந்த அவர்களுடைய தனித்தனியான பகுதிகளில் தனித்தனியாக பாதைகள் அமைக்கப்பட்டும், குடி நீர் வசதியும் செய்தும் கொடுக்கப்பட்டனவாம்.ஆனாலும் மலை மீது எறிச் சென்ற பக்தர்கள் ஒன்றுபட்டு இரண்டு தேவிகளையும் வணங்கி ‘ஜெய் மாதா கீ ஜெய்’ என கோஷமிட்டனர்.

மலை மீது ஒரு இடத்தில் கற் குவியல் உள்ளது. அவை என்ன எனில் அந்த மலையில் இருந்து சிறு கற்களை எடுத்து ஒரு வீடு கட்டுவதாக நினைத்துக் கொண்டு குவியலாக வைத்து விட்டால் நிச்சயமாக ஒரு வருக்கு சொந்த மனை பெறும் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கட்டப்பட்ட வீடுகள். பல் வேறு இடங்களில் இருந்தும் சாரி சாரி யாக பெரும் திரளான மக்கள் காலணி எதுவும் அணியாமல் நடந்தே வந்து மலை மீது சென்று இரு தேவிகளையும் வணங்குவது நவராத்திரி காலத்தில் காண வேண்டிய காட்சியாகும்.அந்த ஒன்பது நாட்களிலும் ஆலயம் இருபத்தி நான்கு மணி நேரமும் திறந்து விடப்பட்டுள்ளது.

இரண்டு தேவி சன்னதிகளைத் தவிற மலையைச் சுற்றி பைரவர், ஆஞ்சனேயர், அன்னபூரணி, காளி போன்றவர்களுக்கும் தனித் தனியான குகைகளில் சன்னதிகள் உள்ளன.அவற்றை தவிற சமய ஒற்றுமைக்குச் சான்றாக அந்த மலை மீது உள்ள தேவிகளின் ஆலயத்திற்கு மேல் பகுதியில் ஒரு முஸ்லிம் பீருடைய (மகான்) சமாதியும் உள்ளது. முஸ்லிம் பெருமக்களும் அங்கு சென்று அவரை வணங்கி வருகின்றனர். அற்புதமாக சலவைக் கற்களினால் கட்டப்பட்ட ஒரு ஜெயின் ஆலயமும் அங்கு உள்ளது.

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கருக்கு துரோகம் செய்த க ...

அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரஸ் இன்று நடிக்கிறது மாநிலங்களின் சம்மதத்துடன் இந்த நாடு உருவாகவில்லை.. இந்த நாட்டுடைய வசதிக்காக ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்களுக்கு  தெரியும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , ' ஐந்தாண்டு ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படா ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம் – ஜெய்சங்கர் 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்கு ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...