கட்ட்க்கடங்கமல் அதிகரிக்கும் பணவீக்கம் , பொருளாதார வளர்ச்சி வேகமாக குறைந்து வருதல் போன்ற காரணங்களால் இந்தியாவின் கடன் பெறும் தகுதி மதிப்பீட்டை ஃபிட்ச் நிறுவனம் ஸ்திர தன்மையிலிருந்து எதிர்மறையாக (நெகடிவ்) குறைத்துள்ளது.
மேலும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையிலும் , தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற் கொள்ள தவறினால் நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடும் பாதிப்பு அடையும் என சர்வதேச தர நிர்ணய அமைப்பான ஃபிட்ச் தெரிவித்துள்ளது.
கடந்த நிதி ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை அளவு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீடான 4.6சதவீதத்தை தாண்டி 5.8 சதவீதமாக உயர்ந்தது. நடப்பு நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறையை 5.1 சதவீதமாக வைத்திருக்க முடியாத நிலை ஏற்படும் என்றும், 5.6-5.9 சதவீதமாக உயரும் எனவும் ஃபிட்ச் மதிப்பீடு செய்துள்ளது.
மேலும், நடப்பு 2012-13-ஆம் நிதி ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 7.5 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக குறைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கடன் பெறும் தகுதி மதிப்பீட்டை ஸ்டாண்டர்டு அண்டு பூர்ஸ் பீபீபீ+ என்ற அளவிலிருந்து பீபீபீ மைனஸ் ஆக குறைத்தது. பீபீபீ மைனஸ் என்பது முதலீட்டு தகுதி அந்தஸ்தின் கடைசி நிலை ஆகும். மேலும், இந்தியா முதலீட்டு தகுதி அந்தஸ்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என இந்நிறுவனம் கடந்த வாரத்தில் எச்சரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ‘பிரிக்’ நாடுகளில் இந்தியாதான் இந்த அஸ்தஸ்தை இழக்கும் முதல் நாடாக இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தது.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.