போபால் சங்கொலி ஆஞ்சனேயர் ஆலயம

 போபால்  சங்கொலி  ஆஞ்சனேயர்   ஆலயமபோபால் மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் ஆகும். அந்த இடத்தில் பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உண்டு. ஆனால் அவை மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டு உள்ளது இல்லை என்றாலும் முக்கித்துவம் வாய்ந்தவை. பல்வேறு காரணங்களினால் அந்த ஆலயங்கள் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கவில்லை என்றாலும் எனக்கு கிடைத்த விவரத்தை நேயர்களுக்கு அளிப்பதில் பெருமையாகவே உள்ளது.

முன்பு போபால் நகரம் முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் அப்கன் நாட்டினரிடம் இருந்த அந்த பிரதேசம் பின்னர் முகமதியர் ஆட்சிமைக்குக் கீழ் வந்தது. அப்படிப்பட்ட நிலையில் பதினெட்டாம் நூற்றhண்டில் பேகம் ஷாஜகான் என்பவர் அந்த இடத்தில் ஆட்சி செய்து வந்தார். முஸ்லிம்களின் ஆட்சியில் நகரம் இருந்தாலும் மத்தியப் பிரதேசத்து மானிலத்தில் ஹனுமான் உபாசனை மிகவும் அதிகம். ஹனுமான் ஆலயங்கள் இல்லாத ஊர்களே மத்தியப் பிரதேசத்தில் இல்லை எனும்படி பல இடங்களிலும் ஹனுமான் ஆலயங்கள் தோன்றி உள்ளன. அதில் சரித்திர முக்கியம் வாய்ந் த ஆலயம் ஒன்று போபால் நகரின் மையப் பகுதியிலேயே அமைந்து உள்ளது. இரயில் நிலையத்தின் அருகில் உள்ள ஹனுமான் கஞ்ச் என்ற ஒரு இடத்தில் உள்ள அந்த அனுமான் ஆலயம் முஸ்லிம் மன்னர்களினாலும் போற்றப்பட்டது.

பேகம் ஷாஜகான் ஆட்சி செய்து வந்திருந்த கா போபால்  சங்கொலி  ஆஞ்சனேயர்   ஆலயமலத்தில் தற்பொழுது ஹனுமான் கஞ்சில் ஆலயம் உள்ள இடத்தில் இருந்த ஒரு ஆலமரத்தடியில் ஒரு முனிவர் வசித்து வந்தார்.அவரை கமாலி மகராஜ் என அழைத்தனர்.அவர் தீவிரமான அனுமான் பக்தர் மட்டும் அல்ல, நன்கு பஜனை செய்வார். அவர் முனிவர் என்பதினால் பலரும் அவரிடம் வந்து ஆசி பெற்றுச் செல்வார்கள். அப்படி வரும் பெரும்பாலான மக்கள் பல சமயங்களில் மாலை நேரங்களில் அங்கு வந்து பஜனை செய்வதுண்டு. அந்த நேரத்தில் அந்த முனிவர் ஒரு சங்கை எடுத்து ஊதுவார். அவரால் முடிந்த வரை நீண்ட நேரம் சங்கொலி எழுப்பி பஜனையை ஊக்குவிப்பார்.சில சமயங்களில் அந்த பஜனை விடியற் காலை வரை நீடிக்கும். பஜனை நடக்கின்றதோ இல்லையோ தினமும் விடியற் காலை அந்த முனிவர் சங்கொலி எழுப்பி ஹனுமானை ஆராதிப்பார். இது பல நாட்கள் தொடர்ந்தது.

அந்த இடத்தின் அருகில் தான் பேகம் ஷாஜகானின் இருப்பிடமும் இருந்தது. அவள் அந்த விடியற்காலை எழும் சங்கொலியை சகித்துக் கொள்ள முடியாமல் அதை ஊதுவது யார் எனக் கண்டறியுமாறு தன் மெய் காப்பாளர்களை அனுப்ப அவர்களும் திரும்ப வந்து அவளிடம் அந்த ஒலியை எழுப்பி வரும் முனிவரைப் பற்றிக் கூறினார்கள்;. ஆகவே அவள் சங்கொலி தனக்கு இடைஞ்சலாக இருந்ததினால், இனி சங்கொலி எழுப்பக் கூடாது என உத்தரவு போட்டாள். ஆனாலும் அவர் அசைந்து கொடுக்கவில்லை. தினமும் விடியற் காலை சங்கொலி எழுப்பி அனுமாரை ஆராதித்துக் கொண்டே இருந்தார். தான் ஆணையிட்டும் சங்கொலி எழுபபுவதை அவர் நிறுத்தவில்லையே என கோபமுற்ற அவள் அந்த முனிவரைக் கொன்று விடும்படி ஆணையிட்டாள். அதற் கேற்ப அவரைக் கொல்லச் சென்ற காவலாளிகள் அந்த ஆல மரத்தடியில் உயிர் இறந்து கிடந்த முனிவரைக் கண்டு அரண்மனைக்குச் சென்று அரசியிடம் விஷயத்தைக் கூறினர்.

ஆனால் மறுநாள் விடியற்காலை மீண்டும் சங்கொலி கேட்டது. அதைக் கேட்ட பேகம் ஷாவின் கோபம் அதிகமாகி உயிர் அற்ற அவர் கைகளையும் தலையையும் வெட்டி வேறு இடத்தில் போட்டு விட்டு வருமாறு ஆணையிட அதை செய்ய அங்கு சென்றவர்கள் ஆச்சரியம் அடையும் வகையில் அந்த முனிவரின் தலையும் கைகளும் வெட்டப்பட்டுக் கிடந்தன. இனி கவலை இல்லை என நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பது போல் மறுநாள் விடியற்காலை மீண்டும் சங்கொலி கேட்டது. அதைக் கண்ட பேகம் ஷாவும் தானே அந்த இடத்திற்கு சென்று பார்த்தாள். ஆனால் அங்கு எவரும் இல்லை. சங்கொலி மட்டும் கேட்டபடி இருந்தது. யாரு மற்ற இடத்தில் இருந்து சங்கொலி மட்டும் எப்படி வருகின்றது ? பயந்து போனவள் தன் செய்கைக்கு அங்கிருந்த ஹனு மான் சிலை முன் மன்னிப்புக் கேட்க அவள் முன் எங்கிருந்தோ வந்து நின்றார் இறந்து விட்டதாகக் கருதப்பட்ட முனிவர்.

அவருடைய மகிமையைக் கண்டவள் அதன்பின் அவருக்கு எந்த விதமான தொந்தரவும் கொடுக்க விரும்பவில்லை. அது மட்டும் அல்ல அவள் அவருக்கு மேலும் சிறிது நிலமும் தானம் செய்தாள். அவரை அடிக்கடி சென்று சந்தித்தும் வந்தாள். ஒரு முறை தன் அரண்மனையில் வைத்திருந்த தன்னுடைய நெக்லஸ் தொலைந்து விட அது விஷயமாக அவரிடம் ஆலோசனைக் கேட்க அங்கு சென்றவளிடம் அவள் வாயைத் திறக்கும் முன்பே அது இருந்த இடத்தைப் பற்றிக் கூற தொலைந்து போன நெக்லஸ் கிடைத்தது. அவருடைய மகிமையைக் கண்டு அவள் திகைத்து நின்றாள். அவர் மீது இன்னும் மதிப்பு அதிகமாயிற்று. அவள் தந்த நிலத்தில் எழுப்பப்பட்டுள்ள ஹனுமான் ஆலயத்தின் பெயராலேயே அந்த இடம் ஹனுமான்கஞ்ச் என இன்றும் அழைக்கப்பட்டு வந்துள்ள அந்த ஆலயம் சிறிய ஆலயம் என்றாலும் மகிமை வாய்ந்ததாகவே உள்ளது. அந்த முனிவர் உபயோகித்து வந்த சங்கும் அந்த ஆலயத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அவர் எப்பொழுது மரணம் அடைந்தார் என்ற விவரங்கள் தெரியவில்லை.

நன்றி சாந்திப்பிரியா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கருக்கு துரோகம் செய்த க ...

அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரஸ் இன்று நடிக்கிறது மாநிலங்களின் சம்மதத்துடன் இந்த நாடு உருவாகவில்லை.. இந்த நாட்டுடைய வசதிக்காக ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்களுக்கு  தெரியும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , ' ஐந்தாண்டு ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படா ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம் – ஜெய்சங்கர் 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்கு ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...