இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின் தொடரும் 10 கோடி பேர்

இன்​ஸ்​டாகி​ராம் சமூக வலை​தளத்​தில் பிரதமர் நரேந்திர மோடியை 10 கோடி பேர் பின் ​தொடர்​கின்​றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு நவம்​பர் 12-ம் தேதி பிரதமர் நரேந்​திர மோடி இன்​ஸ்​டாகி​ராமில் இணைந்​தார். அவர் இணைந்த சில மணி நேரங்​களில் 50,000 பேர் அவரை பின்​ தொடர்ந்​தனர். கடந்த 2018ம் ஆண்​டில் இன்​ஸ்​டாகி​ராமில் பிரதமர் மோடியை பின்​          தொடர்​வோர் எண்​ணிக்கை ஒரு கோடி​யாக உயர்ந்​தது.

கடந்த 2020-ம் ஆண்​டில் இந்த எண்​ணிக்கை 4 கோடி​யாக அதி​கரித்​தது. கடந்த 2022ம் ஆண்​டில் 7 கோடி பேர், 2023ம் ஆண்​டில் 8 கோடி பேர், 2024ம் ஆண்​டில் 9 கோடி பேர், 2025ம் ஆண்​டில் 9.5 கோடி பேர் என பின்​ தொடர்​வோரின் எண்​ணிக்கை படிப்​படி​யாக உயர்ந்​தது.

தற்​போது இன்​ஸ்​டாகி​ராம் சமூக வலை​தளத்​தில் பிரதமர் நரேந்திர மோடியை பின்​தொடர்​வோரின் எண்​ணிக்கை 10 கோடியை தாண்டி உள்​ளது. இதன்​ மூலம் இன்​ஸ்​டாகி​ராமில் அதிக பின்​தொடர்​வோரை கொண்ட உலகத் தலை​வ​ராக பிரதமர் நரேந்​திர மோடி உரு​வெடுத்​துள்​ளார். இதன் ​மூலம் அவர் புதிய சாதனையை படைத்​திருக்​கிறார்.

இன்​ஸ்​டாகி​ராமில் பிரதமர் மோடிக்கு அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை 4.32 கோடி பேர் பின்​ தொடர்​கின்​றனர். இந்தோ​னேசிய அதிபர் பிர​போவா சிபி​யாண்​டோவை 1.5 கோடி பேரும், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுாலா டா சில்வாவை 1.44 கோடி பேரும், துருக்கி அதிபர் எர்​டோகனை 1.16 கோடி பேரும், அர்​ஜென்​டினா அதிபர் ஜேவியர் மிலேவை 64 லட்சம் பேரும் பின் ​தொடர்​கின்​றனர்.

இந்​திய அளவி​லான இன்​ஸ்​டாகி​ராமில் பிரதமர் மோடிக்​கும் இதர தலை​வர்​களுக்​கும் இடையி​லான இடைவெளி மிக, மிக             அதி​க​மாக உள்​ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...