ஆயுளை விருத்தி செய்யும் மூன்றாம் பிறை

 ஆயுளை  விருத்தி  செய்யும் மூன்றாம் பிறைவளர்பிறையிலேயே மூன்றாம் பிறை மிகச்சிறப்பு வாய்ந்தது. அதை தெய்வீகமான பிறை என சொல்லலாம். இத்தாய் பிறை சூடிய பெருமானே என நாயன்மார்கள் போற்றி பாடுகிறார்கள். இந்தமூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். காமாட்சி அம்மனை பார்த்தாலும் அந்தமூன்றாம் பிறைதான்.

அமாவாசை முடிந்து வெளிப்பட கூடிய பிறை தான் மூன்றாம் பிறை. ஏனெனில் , அமாவாசைக்கும், அதற்கு அடுத்த நாளும் சந்திரன்தெரியாது. அதற்கு மறு நாள்தான் ஒரு கோடு போல சந்திரன் மிளிரும். . அதன் பிரகாசத்தை பார்க்கும் பொது , அது உங்களுக்குள் ஏதோ ஒன்றை தூண்டும். முழுநிலவு எனு‌ம் பெளர்ணமி நிலவு தூண்டாத சில விஷயங்களை இந்த மூன்றாம்பிறை நிலவு நமக்கு தூண்டும்.

அனைத்து மதங்களிலுமே மூன்றாம்பிறை வழிபாடு தான் தெய்வீகமான வழிபாடாக உள்ளது . இஸ்லாம் மத‌த்‌தி‌லிரு‌ந்து, ஜைன‌ம், கிறித்தவம், இந்து மத‌ம் என்று எல்லா மதங்களும் மூன்றாம்பிறை என்பது தெய்வீக அம்சம் பொருந்தியது என தெரிவிக்கிறது . அந்த பிறையைகண்டு வணங்குவது ஆயுளை விருத்தி செய்யும் , செல்வங்களை சேர்க்கும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும். அதுவும், திங்கட் கிழமையுடன் மூன்றாம்பிறை வரும் போது, சோமவாரம் என்பார்கள் திங்கட் கிழமையை. அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம்பிறையை நீங்கள் பார்த்து விட்டால், வருடம் முழுவதும் நீங்கள் சந்திரனை வணங்கிய_பலன்கள் அனைத்தும் கிடைக்கும். அதனால் மூன்றாம்பிறை என்பது ஒருதெய்வீகமான பிறை. அதனை பார்த்தாலே மனக் கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கக்கூடியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...