முதல் வெற்றி, முதல் படுகொலை.

முதல் வெற்றி, முதல் படுகொலை. "இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்துஸ்தானை ஆக்கிரமித்தது (வெற்றிக் கொண்டது) தான் மனித வரலாற்றிலேயே, இரத்தம் தோய்ந்த வரலாறு" என்று அமேரிக்காவைச் சார்ந்த வில் துரன்ட் தனது "STORY OF CIVILISATION" என்ற புத்தகத்தில் கூறும் அளவிற்கு இந்துக்களின் இரத்தம் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் குடிக்கப்பட்டுள்ளது.

இந்துஸ்தானத்தின் முதல் பெரிய இஸ்லாமிய ஆக்கிரமிப்பு என்பது 712AD_ல் முகமது பின் காசீம் என்பவனால் நடத்தப்பட்டது. பாரத தேசத்தில் இஸ்லாமியர்களால் நடத்தப்பட்ட முதல் இந்து படுகொலை என்று கூட இந்த ஆக்கிரமிப்பை கூறலாம். இந்த முதல் படுகொலை நடந்த இடம், சிந்து.

632AD_களில் அரேபிய இஸ்லாமியர்கள் பாலஸ்தீன், சிரியா, பேர்சியா, ஈராக், ஈரான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் மீது படையெடுத்து, சுலபமாக தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து கொண்டிருந்தனார். காரணம் வேறோன்றுமில்லை, "கொலை, கொள்ளை, கட்டாய மதம் மாற்றம்" போன்ற தங்கள் உன்னதக் கொள்கைக்காக தான்.

இதே காலகட்டத்தில், அரேபியர்கள் பாரத தேசத்தையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர பல முறை முயன்றனர். ஆனால், அவர்களுக்கு "தோல்வி" என்ற வெகுமதியே கிட்டியது. குறிப்பாக, தானே மற்றும் போரோச் கடற்கரை வழியாக படையெடுத்து வந்த இஸ்லாமியர்கள், இந்து அரசர்களால் ஓட ஓட விரட்டப்பட்டனர்.

அவ்வளவு ஏன்? 712AD_ல் காசீம் சிந்து பகுதியை வெற்றிகரமாக ஆக்கிரமித்தான். ஆனால், அதே சிந்து பகுதியில் 643_களில், முகஐரக்(Mughairah) என்பவன் தலைமையில் படையெடுத்து வந்த அரேபியர்கள் "துண்டைக் காணும், துணியைக் காணும்" என்று சிந்து அரசரால் துரத்தப்பட்டனர். முகஐரக் இதே சிந்துவில் தோற்க்கடிக்கப்பட்டு, உயிரிழந்தான்.

712AD_ல் சிந்து பகுதியை நோக்கி படையெடுத்து வந்த காசீம், ராஜா தாகீர்(Dahir) உடனோ அல்லது அவர் ராணுவத்துடனோ மட்டும் போரிடவில்லை, அவன் செல்லும் வழியிலுள்ள மக்களை கொன்று குவித்தான்; பெண்களையும், குழந்தைகளையும் அடிமைப்படுத்தினான்; கோவில்கள் எல்லாம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன. இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. பொதுவாகவே, இஸ்லாமிய படையெடுப்புகளின் போதும், இஸ்லாமிய ஆட்சிகளின் போதும் நிகழும் சாதாரணமான விஷ்யம் தான் இது!

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானல், காசீம் டீபல் என்ற கடற்கரை பகுதிக்குள் நுழைந்த போது, அந்த பகுதி முழுவதையும் கொள்ளையடித்தான். கண்களில் தென்பட்ட ஆண்களை எல்லாம் கொன்றான். குறிப்பாக, இளைஞர்களை குறிவைத்து கொன்றான். காசீமால், சிந்து பகுதியில் அடிமைபடுத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 700!

இவ்வாறு அடிமைப் படுத்தப்பட்ட பல பெண்கள் கட்டாயமாக இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, காசீம் படைவீரர்களுக்கு கட்டாய திருமணம் செய்துவைக்கப்பட்டனர். முல்தான், குதர் போன்ற பகுதிகள் எல்லாம் அரேபியர்களின் குடியிருப்புக்களாக மாற்றப்பட்டன.

காசீம், ராஜா தகீரின் ரவார் கோட்டையை கைப்பற்றி, கிட்டத்தட்ட 6000 போர் வீரர்களை கொன்றான். அந்தசமயம், கோட்டையில் சிக்கிக்கொண்ட ராஜாவின் சகோதரியும் மற்றும் சில பெண்களும் ஒன்று கூடி, "இந்த அரக்கணிடம் இருந்து நாம் தப்ப முடியாது. ஆதலால், நாம் நம் கவுரவத்தையும், மானத்தையும் காத்துக்கொள்ள, நமக்கு நாமே தீவைத்துக் கொள்வோம்" என்று முடிவு செய்து தங்கள் மானத்திற்காக தங்கள் வாழ்கையை முடித்துக் கொண்டனர்.

காசீம், சிறைப்படுத்தப்பட்ட பெண்களை ஒரு உயிருள்ள ஒரு மனித இனம் என்று எண்ணியதே இல்லை. அவனை பொருத்தவரை, அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள் என்பது காமத்தை தீர்த்துக்கொள்ள உபயோகப்படும் ஒரு கொள்ளைப் பொருள் மட்டுமே. இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இதோ.

காசீம், தான் கொள்ளையடித்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை, தன் மாமாவான ஹஜ்ஜாஜ்(Hajjaj)_யிடம் ஒப்படைத்தான். (ஹஜ்ஜாஜ் அன்றைய ஈராக் கவர்னர். இவன் தான் காசீமை சிந்து பகுதியின் மீது போர் புரிய அனுப்பியது.) காசீம் ஹஜ்ஜாஜ்க்கு அளித்த பங்கில், 75 திருமணமாகாத கன்னிப் பெண்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

"டீபலில் உள்ள கோவில்கள் காசீமினால் தீக்கு இரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அவ்வாறு அழிக்கப்பட்ட பல கோவில்கள் மசூதிகளாக மாற்றப்பட்டது" என்று வரலாற்றாசிரியர் உப்பேன்தரா தாகூர் கூறுகிறார்.

இத்தகைய இழி குணம் கொண்ட காசீமுக்கு சிலர் வக்காளத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர். காசீமின் படையெடுப்பை நியாயப்படுத்த, அரேபிய இஸ்லாமியர்களாகவே மாறிவிட்ட அவர்கள் கூறும் காரணம்: "டீபல் கடற்பகுதியில், அரேபிய கப்பல்கள் கொள்ளையடிக்கப்பட்டது. அதில் பரிசு பொருட்களும், அரேபிய தேசத்தவரும் இருந்தனர். இவர்களை மீட்கத்தான், காசீம் படையெடுத்து வந்தானம்."

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய சில விஷ்யங்கள் உள்ளன. ஒன்று, காசீமின் 712AD படையெடுப்பு என்பது, இஸ்லாமியர்களின் முதல் படையெடுப்பல்ல. அதற்கு முன்பே, 643AD_ல் அரேபிய இஸ்லாமியர்கள் இந்துஸ்தான் மீது படையெடுத்துள்ளனர். ஆக, இதன் தொடர்ச்சியாகத் தான் 712AD படையெடுப்பை காண முடிகிறது.

இரண்டு, காசீமுக்கு கடற்கொள்ளையர்களுக்கும், அரசர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்ததில் ஆச்சிரியமில்லை. ஏன்யென்றால், காசீம் என்பவனும், ஹஜ்ஜாஜ் என்பவனுமே ஒரு கொள்ளைக்காரர்கள் தானே. ஆக, அவர்களைப் போலவே, அனைத்து ராஜ்ஜிய அரசர்களும் கொள்ளைக்காரர்களாக தான் இருப்பார்கள் என்று நினைத்துவிட்டனர் போலும். கடற்கொள்ளையர்கள் கப்பலை கடத்தியதற்கு, சிந்து ராஜா தாகீரிடம் நஷ்டயீடு கேட்டவர்கள் தான் இந்த அரேபியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று, அரேபியர்களுக்கு வித்தியாசம் தெரியாமல் இருந்ததில் ஆச்சிரியமில்லை. ஆனால், இன்று அறிவுஜீவிகள் போல பேசுபவர்களுக்கு கூட இது தெரியாமல் இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இரண்டு படைகளுக்கு நடுவே மட்டும் சண்டை நடந்தது என்றால் சரி. ஆனால், காசீம் படைகளால் அப்பாவி மக்கள் ஏன் கொல்லப்பட்டனர்? மக்கள் ஏன் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர்? ஏன் கோவில்கள் அழிக்கப்பட்டன? காசீமுக்கு வக்காளத்து வாங்குபவர்கள், இதை ஏன் சிந்திக்க மறுக்கின்றனர்?

இன்னும், இல்லை இல்லை காசீம் மிகவும் நல்லவர் என்று கூறும் அறிவு ஜீவிகளுக்காக, மற்றும் ஒரு ஆதாரத்தை குறிப்பிடுகிறேன்.

"சிவிஸ்தான் மற்றும் சிஸ்ம் கோட்டைகளை ஏற்கனவே கைப்பற்றிவிட்டேன். தாகீரின் மருமகனையும், அவரின் படையையும், மந்திரிமார்களையும் எளிதாக வெற்றி கொண்டுவிட்டேன். அதுமட்டுமல்ல, அல்லாவை ஏற்காதவர்களை (இந்துக்களை) இஸ்லாமுக்கு மதம் மாற்றிவிட்டேன். மதம் மாறாதவர்களை அழித்துவிட்டேன். சிலை வழிபாடு உள்ள கோவில்களுக்கு பதில் மசூதிகள் கட்டப்பட்டுள்ளது." என்று தன் மாமா ஹஜ்ஜாஜ்க்கு காசீம் கடிதம் எழுதியதாக, காசீமின் அதிகாரபூர்வ வரலாற்றை(அரேபிய படையெடுப்பு) கூறும் புத்தகமான சாச் நாமாவில் (CHACH-NAMAH) கூறப்படுகிறது.

காசீமுக்கு வக்காளத்து வாங்கும் அறிவு ஜீவிகள், இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? நம்ப முடியாது, "ஆகா, காசீம் காலத்திலேயே, இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் சதி செய்துள்ளதே" என்று கூறினானும் கூறுவார்கள்.

நன்றி ; "பாரத குரல்" சுஜின்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...