தங்களின் மீது தாக்குதல் நடத்தபடலாம் என கிளம்பிய பீதியை தொடர்ந்து , அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலத்தை சேர்ந்ததவர்கள் பெங்களூலிருந்து ஒரேநாளில் வெளியேறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரில் வடகிழக்கு மாநிலங்களவை சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர் .இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் வாழும் வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்தோர் மீது ஆகஸ்ட் 20-ம் தேதி ரம்ஜான் நோன்புக்கு பிறகு அசாமில் நடத்தப்பட்டதை போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று திடீரென பரவியது.
எஸ்.எம்.எஸ், இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை மூலம் இந்த வதந்தி வேகமா பரவியது.
இதனால் பீதியடைந்த வடகிழக்கு மாநிலத்தவர்கள்,உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்புவதற்காக தங்கள் உடைமைகளுடன் ஒரே நேரத்தில் பெங்களூர் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.
அலை அலையாய் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்தை நேற்று இரவிலிருந்து முற்றுகையிட்டுக் கொண்டே இருந்தனர்.கவுகாத்தி செல்லும் ரயிலில் ஒரே நேரத்தில் கூட்டமாக ஏற முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.பலர் அவசர ஜன்னல் கதவு வழியாக உள்ளே ஏறிச் சென்றது பரிதாபமாக இருந்தது.இதில் பல பெண்களும் தங்களது கைக்குழந்தையுடன் இதேப்போன்று ஏறி உள்ளே சென்றது வேதனையை ஏற்படுத்துவதாக இருந்தது.
இதனால் பெங்களூரு ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பெங்களூரு ரயில் நிலையம் வந்த கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், “வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், உரிய பாதுகாப்பு தரப்படும் என்றும் வடகிழக்கு மாநிலத்தவரிடம் கேட்டுக் கொண்டார்.மேலும் காவல்துறையினரும் ஒலிபெருக்கி மற்றும் சேனல்கள் மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை
இதற்கிடையே, பெங்களூரை விட்டு தங்களது சொந்த மாநிலத்திற்குக் கிளம்பிய அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் 250க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தடிகள் புடை சூழ பாதுகாப்பு கொடுத்து புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர்கள் வட கிழக்கு மாநிலத்தவர்களுக்கு ஆறுதல் கூறிப் பேசினர். இந்தப் பாதுகாப்புப் படைக்கு பெங்களூர் நகர ஆர்.எஸ்.எஸ். தலைவர் கருணாகர ராய் தலைமை தாங்கினார்.
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.