நாட்டின் பொருளாதார நிலை குறித்து விவாதிப்பதற்காக பா,ஜ,க ஆளும் மாநில முதல்வர்கள், கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் கூட்டத்தை கட்சியின் தேசியதலைவர் நிதின் கட்காரி டெல்லியில் நேற்று கூட்னார் .
இந்த கூட்டத்தில் பா.ஜ.க ஆளும் மாநில முதல்-மந்திரிகள் நரேந்திரமோடி (குஜராத்), சிவராஜ் சிங் சவுகான் (மத்திய பிரதேசம்), ஜெகதீஷ் ஷெட்டர் (கர்நாடகா ) , சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் உள்ளிட்டவர்களும், கட்சியின் மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இந்தகூட்டத்தை தொடங்கி வைத்து நிதின் கட்காரி பேசியதாவது:-
நாட்டின் பொருளாதார நிலை மிகமோசமாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துகொண்டே போகிறது . ஆட்சி நிர்வாகத்தினில் ஏற்பட்டுள்ள தொய்வு, கொள்கை முடக்கம் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது. பொருளாதார சீர் திருத்தங்களும், கொள்கை முடிவுகளும் தவிர்க்கபடுகின்றன.
மத்தியில் பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் இருந்து விடைபெற்ற போது, நாட்டின் கடன் சுமை உள் நாட்டு உற்பத்தியில் 17.8% இருந்தது. தற்போது அது 68.05%மாக உயர்ந்துள்ளது. எனவே ரஷியா, பிரேசில், சீனா, இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளில் இந்தியாவின் நிலை மிகமோசமாகி இருக்கிறது.
தற்ப்போது பா.ஜ. க கூட்டணி தேசிய வளர்ச்சி கூட்டணியாக மாறியுள்ளது. ஏனென்றால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் குஜராத், சத்தீஷ்கார், ஜார்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களும் நாட்டிலேயே அதிகவளர்ச்சி கண்டுள்ள ஆறு மாநிலங்களில் இடம் பெற்றுள்ளன.
ஐக்கிய முற் போக்கு கூட்டணி சரியான தொலை நோக்குப் பார்வை, நல்ல வழி காட்டி, உறுதி இல்லாமல் தவிக்கிறது. மத்திய அரசிடம் முடிவுஎடுப்பதில் அரசியல் உறுதிபாடு இல்லை. ஆகா மொத்ததில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி நாட்டின் வளர்ச்சிக்கு வேகத் தடையாக அமைந்துள்ளது என்று நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.