நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுதொடர்பான சிஏஜி அறிக்கையை தற்போதைய வடிவிலேயே நாடாளு மன்றத்தில் விவாதிக்க முடியாது என பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் கூறியுள்ளார் .
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது “சிஏஜி அறிக்கை குறித்து முதலில் விசாரிக்க வேண்டியது நாடாளுமன்ற பொதுகணக்குக் குழு பிஏசிதான். பிஏசியின் ஆய்வு முடிவுக்குப் பிறகு, அதன் முடிவில் தயாரிக்கப்படும் அறிக்கை, நாடாளுமன்றத்தில் அளிக்கப்படும். அதன் அடிப்படையில் சிஏஜி அறிக்கையை இரு அவைகளிலும் விவாதிக்கலாம். ஆனால், இந்த நடைமுறைகள் எதையும் மனதில் கொள்ளாமல் இந்த அறிக்கையைக் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்கத் தயார் என்று மத்திய அரசு கூறுகிறது. அரசின் இந்தப் போக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட பொதுக் கணக்குக் குழு, மத்திய கணக்குத் தணிக்கையாளர் பதவி போன்றவற்றை சிறுமைப்படு்த்தும் வகையில் உள்ளது என்றார் ஜஸ்வந்த் சிங்.
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.