நிலக்கரியை இறக்குமதி செய்ததில் அரசுக்கு ரூ.18 லட்சம் கோடி வருவாய்யிழப்பு

 நிலக்கரியை   இறக்குமதி செய்ததில்  அரசுக்கு ரூ.18 லட்சம் கோடி வருவாய்யிழப்பு குத்தகைக்கு எடுத்த சுரங்கங்களிலிருந்து நிலக்கரியை வெட்டியெடுக்காமல் , வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததினால் அரசுக்கு ரூ.18 லட்சத்து 100 கோடி வருவாய்யிழப்பு ஏற்பட்டிருப்பதாக அகில இந்திய கணக்கு தணிக்கை ஊழியர் சங்கதலைவர் துரை பாண்டியன் தெரிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; நிலக்கரி ஊழல் குறித்து பல அடுக்குகளாக தணிக்கைசெய்து பல நிலை அதிகாரிகளின் விளக்கங்களுடன்சேர்த்து அறிக்கை தயார்செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிஏஜியை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும், பிரதமரும் குறைகூறுவது ஜனநாயகத்துக்கும், இந்திய அரசியல்_ அமைப்புக்கும் புறம்பானது.

குத்தகைக்கு எடுத்த 28 சுரங்கங்களில் மட்டும் 34.64டன் நிலக்கரி எடுக்கபட்டுள்ளன. 68 சுரங்கங்களில் நிலக்கரி எடுக்கப் படவில்லை. காலம்தாழ்த்தினால் விலையேற்றம் வரும், அப்போது எடுத்துக்கொள்ளலாம் என்று குத்தகை தாரர்கள் நிறுத்திவைத்துள்ளனர். மீதமுள்ள 116 சுரங்கங்களில் இருக்கும் 49 ஆயிரத்து 790 மில்லியன்டன் நிலக்கரியை எடுப்பதற்கு அனுமதி இல்லை.

சாதாரணமாக இந்திய நிலக்கரி நிறுவனம் ஒரு டன் நிலக்கரியை ரூ.295.41 விற்கும். ஏல விலையில் அதிக பட்சமாக ரூ.1782.க்கு விற்கும் இந்தவிலைக்கு இந்தியாவில் நிலக்கரியை எடுக்காமல் வெளி நாடுகளில் இருந்து ஒருடன் ரூ.2874க்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த அடிப்படையில் உண்மையான விலைக்கும், ஏல விலைக்கும் கணக்கிட்டுப் பார்த்தால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் இழப்பு ரூ.18 லட்சத்து 100 கோடி என்று அதிர்ச்சி குண்டை தூக்கி போட்டார் எம்.துரைபாண்டியன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...