மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு எதிராக கோவாவில் மானியவிலையில் கூடுதலாக ஆறு கியாஸ் சிலிண்டர்களை வழங்க மனோகர் பரிக்கர் தலைமையிலான ஆளும் பா.ஜ.க அரசு அறிவித்துள்ளது ,
சமீபத்தில் மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களுக்கு, மத்திய அரசு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. அதாவது ஒருகுடும்பத்துக்கு ஆண்டுக்கு ஆறு சமையல்கியாஸ் சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கபடும் . கூடுதலாக வேண்டும் என்றால் அதற்கு சந்தைவிலை வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்தஅறிவிப்புக்கு பொதுமக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது , இந்நிலையில் கோவா மாநில அரசு மத்திய அரசின் உத்தரவை பின் பற்றுவதில்லை என்று முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கோவா மாநில பொதுவிநியோக துறை மந்திரி தயானந்த மண்ட்ரேகர் தெரிவித்ததாவது; முதவர் மனோகர் பரிக்கர் சமீபத்தில் தாக்கல்செய்த பட்ஜெட்டில், குடும்ப பயன் பாட்டுக்கான நுகர்வில் எந்த வித கட்டுப்பாடும் அனுமதிக்கப்படாது என உறுதியளித்திருந்தார். அதன் படி, சமையல் கியாஸ் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும். அதாவது மத்திய அரசின் 6 மானிய சிலிண்டர்கள் போதாது என கருதுபவர்களுக்கு, மானிய விலையில் கூடுதாக ஆறு சிலிண்டர்கள் வழங்கப்படும் . இதற்காக கூப்பன்முறை கொண்டு வரப்படும் 5 ஆண்டுகளுக்கு இந்த_திட்டம் தொடரும் என தெரிவித்தார்.
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.