டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விநியோகத்தில் புதிய கட்டுப்பாடுகள் போன்றவற்றை கண்டித்து பா.ஜ.க உள்ளிட்ட எதிர்கட்சிகளின் சார்பாக இன்று நாடு தழுவிய பந்த் நடைபெறுகிறது . இதனால் நாடுமுழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியும், வீட்டு உபயோகத்திற்கு ஆண்டிற்கு 6 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதை கண்டித்து பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று நாடுதழுவிய பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு தமிழகத்தை சேர்ந்த திமுக. பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் வணிக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆகியவை பந்த்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.
மேலும் முக்கிய தொழிற் சங்கள் பந்த்தில் கலந்துகொள்ள போவதாக அறிவித்து ள்ளதால், தமிழகத்தில் அரசு பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயங்கப்படலாம் என தெரியவருகிறது .
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பந்த்திற்கு பலத்த ஆதரவு உள்ளதால், தமிழகத்தில் இருந்து செல்லும் பொருட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.
தமிழகத்தில் பந்த்தின் போது அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், 1.15 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது. மும்பையிலும், டெல்லியிலும் உள்ள வியாபாரிகள் அமைப்புகள் பந்த்திற்கு பலத்த ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் டீசல் விலை உயர்வை கண்டித்து நள்ளிரவு முதல் பந்த் நடத்த ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. இதனால் 24 மணி நேரம் நாடு முழுவதும் உள்ள 75 லட்சம் லாரிகள் இயங்காது. தமிழகத்தில் 5 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றன.
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
Leave a Reply
You must be logged in to post a comment.