டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, சமையல் எரிவாயுக்கான கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை எதிர்த்து பாரதிய ஜனதா , இடதுசாரிகள மேற்கொண்ட ,நாடு தழுவிய முழு அடைப்பில் இந்தியா முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதித்தது , மேலும் பா.ஜ.க. தலைவர் நிதின் கட்கரி, பிரகாஷ் காரத், சந்திரபாபு நாயுடு, முலாயம்சிங் யாதவ், ஏபி. பரதன், சீதாராம் யெச்சூரி உளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசுக்கு எதிர்ப்புதெரிவித்து நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் தீவிரமாக நடந்தது இதனால் நாட்டின் பெரும் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
டெல்லியில் முக்கிய சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாள்ர் ஸ்ரீ ரவி ஷன்கர் அய்யர் சைக்கில் பேரணிசெல்ல முயன்ற போது கைது செய்யப்ட்டார். மேலும் ஜன்தரமந்தரில் பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டனர்.
தனி மேடை அமைத்து போராட்டம் நடத்திய சமாஜ்வாதி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சயின் உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர் பிரகாஷகாரத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் , மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
பெங்களூரில் கர்நாடகா முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா , அனந்த குமார் உள்ளிட்ட பா.ஜ.க மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.