கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் வெளிநாட்டு பின்னணி உள்ளதாகவும் , உலகிலேயே இது தான் மிகவும் நம்பகமான அணுஉலை என்றும் ரஷ்யா துணை பிரதமர் டிமித்ரி ரோகோசின் கருத்து தெரிவித்துள்ளார் .
மேலும் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது கூடங்குளம் அணுஉலையை மிக பாதுகாப்பான முறையில் வடிவமைத் துள்ளோம். செர்னோபில் அணுஉலை விபத்தை தொடர்ந்து அணுஉலை ஆபத்துகளை நாங்கள் உணர்ந்து உள்ளோம். எனவே, அதி நவீன தொழில் நுட்பத்துடன் வடிவமைத்துள்ளோம். உலகிலேயே இது தான் மிகவும் நம்பகமான அணுஉலை.
அணு ஒத்துழைப்பு கமிட்டி தலைவர் என்ற வகையில் , எனது வார்த்தைகளுக்கு நானே பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். இந்த நிலையில், கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தில் வெளி நாட்டு பின்னணி உண்டா? என கேட்கிறீர்கள். நாங்கள் வெளி நாட்டு பின்னணியை நிராகரிக்கவில்லை. அதே நேரத்தில் , இந்தபோராட்டம் தவறானது அல்ல. நமது உணர்ச்சி கொந்தளிப்புகள் இந்த திட்டத்தை தடுத்துவிடக்கூடாது என்றார்.
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.