மத்திய அமைச்சரவை மாற்றம் ஒரு வீண் நடவடிக்கை, நாடாளுமன்றத்தை முடக்குவதன் மூலம் அரசின் கருவூலம் நிரம்பும் என்றால், அதன் மூலமாக ஊழலையும் எதிர்க்கமுடியும் என்றால் அதைச்செய்ய பாரதிய ஜனதா தயங்காது என பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி விமர்சித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ,”திரிணமூல் காங்கிரஸ் ஆதரவை திரும்ப பெற்ற பொழுதே மத்திய அரசு தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டது. அமைச்சரவை மாற்றம் என்பது ஒரு வீண் நடவடிக்கை என பா.ஜ.க. கருதுகிறது.
இரண்டு வருடத்துக்கு முன்பு, 2ஜி விவகாரத்தை முன் வைத்து நாங்கள் நாடாளுமன்ற குளிர்காலதொடரை முடக்கியதால், அரசுக்கு ரூ.2 லட்சம்கோடி லாபம் கிடைத்தது. அதே போன்று நாடாளுமன்றத்தை முடக்குவதன் மூலம் அரசின் கருவூலம் நிரம்பும்என்றால், அதன் மூலமாக ஊழலையும் எதிர்க்கமுடியும் என்றால் அதைச்செய்ய பாரதிய ஜனதா தயங்காது. ஐ.மு.கூட்டணியின் இமாலய ஊழல்களை பார்த்துக்கொண்டு எங்கள் கட்சியால் மௌனமாக இருக்கமுடியாது.
பிரதமர் மன்மோகன்சிங் ஒரு பொருளாதார நிபுணராகவும், நேர்மை யானவராகவும் கருதப்படுகிறார். ஆனால் ஐ.மு.கூட்டணியின் இரண்டம் அரசில் இந்தநிலை மாறிவிட்டது. கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் படித்த அவர் பல உயர்பதவிகளை வகித்தவர் . ஆனால், 9.2 % வளர்ச்சியை எட்டுவோம் என அவர் வாக்குறுதி தந்ததற்கு மாறாக, 5.2 % வளர்ச்சி தான் ஏற்பட்டுள்ளது.
சோனியா காந்தி மருமகன் ராபர்ட்வதேரா மேற்கொண்ட அனைத்து நிலபேரங்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ள பட வேண்டும். பாஜக.வில் மிகச் சிறந்த முதல்வர்கள் உள்ளனர். அவர்களை ஒப்பிடுவது சரியாக இருக்காது. குஜராத், இமாசல பிரதேசம் சட்ட சபை தேர்தல்களில் எங்கள் கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும். அது மத்திய அரசுமீதான கருத்து கணிப்பாக அமையும்.
பாஜக. தலைவர் கட்கரி மீதான புகார்களைப் பொறுத்தவரை, புகார்வெளியான முதல் நாளே அரசு அல்லது எந்த வெளி விசாரணை அமைப்பின் விசாரணைக்கும் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார். மத்திய அரசு எங்களுக்கு எதிராக இருந்த போதிலும் அவர் அப்படிக்கூறினார். ஆனால், தங்கள்மீது புகார்கள் வந்த போது விசாரணைக்கு தயார் என காங்கிரஸை சேர்ந்த எந்த தலைவரும் கூறவில்லை என ராஜீவ் பிரதாப் ரூடி கூறினார்
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.