ராகுல் காந்திக்கு தோல்வி பயம் வந்து விட்டது. தோல்வி எனும் பழி சொல்லுக்கு ஆளாகமல் இருக்க பீதியில் குஜராத் தேர்தல்பிரசாரத்தை தவிர்த்து வருகிறார் என்று முதல்வர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசியதாவது ; காங்கிரஸ்சின் பிரதமர்
வேட்பாளர் என்று சொல்லப்படும் ராகுல் காந்தி , குஜராத் தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் வராமல் இருப்பது ஏன்? ராகுலுக்கு தோல்விபயம் வந்து விட்டது.கடந்த சிலமாதங்களுக்கு முன்பு நடந்த உ.பி சட்ட மன்ற தேர்தல் பிரசாரத்துக்காக , தேர்தல் தேதி அறிவிக்க படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே அந்த மாநிலத்தில் முகாமிட்டு பிரசாரம்செய்தார் ராகுல்.
ஆனால் தேர்தல்முடிவுகள் என்ன ஆனது ? காங்கிரஸ் கட்சியை உ.பி. வாக்காளர்கள் மொத்தமாக வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். ராகுலை உ.பி. வாக்காளர் மண்ணைகவ்வ வைத்துவிட்டனர்.அதேநிலைதான் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட போகிறது. இதை தெரிந்துதான் , எங்கே தோல்வி ஏற்பட்டு விடுமோ என பழியை சுமக்கநேரிடும் என்று பயந்துதான் பிரசாரத்துக்கு வரவில்லை. காங்கிரஸ் கட்சியிலேயே சில தலைவர்கள் அதிருப்தி அடைந்து கட்சியைவிட்டு வெளியேறி வருகின்றனர். இவ்வாறு நரேந்திரமோடி பேசினார்.
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.