மாதம் ஒரு குடும்பத்துக்கு ரூ.600 இலவசமாக வழங்கும் டெல்லி மாநிலஅரசின் திட்டத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் அன்ன ஸ்ரீ என்ற பெயரில் புதிய உணவுபாதுகாப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்தினார் இத்திட்டத்தின்
படி, டெல்லியில் வசிக்கும் ஏறத்தாழ இரண்டு லட்சம் ஏழை குடும்பங்களுக்கு மாதம்தோறும் தலா ரூ.600 பணமாக வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் படி முதல்-மந்திரி ஷீலா தீட்சித், 5 பேர்கொண்ட ஒரு குடும்பத்துக்கு இந்ததொகை போதுமானது என கூறியிருந்தார்.
இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; ஷீலா தீட்சித்தின் இந்த அறிவிப்பு சமானியர்களை கேலிசெய்வது போன்று உள்ளது , தற்போது இருக்கும் விலைவாசியில் இந்ததொகையை வைத்து ஒரு குடும்பத்துக்கு ஒருமாதத்துக்கு தேவையான பருப்பு, அரிசி, கோதுமையை வாங்கமுடியுமா?. ஷீலா தீட்சித்தும் காங்கிரஸ்சும் நாட்டின் உள்ள பொருளாதார நிலை என்ன என்பதே தெரியாமல் உள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.