கற்பழிப்பு சம்பவத்தினால் பாதிக்கப் பட்ட பெண்கள், இருப்பதும் இறப்பதும் ஒன்று தான். அந்தபெண்ணின் உடல்காயங்கள் ஆறிப்போனாலும், மனக் காயங்களினால் அவள் நடைப்பிணமாகதான் வாழமுடியும் சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஓடும் பஸ்சில் மாணவி கற்பழிக்கப் பட்ட சம்பவம் குறித்து பாராளுமன்றத்தில் அவர் மேலும் பேசியதாவது; மத்திய அரசும், டெல்லி முதல் வரும் இதைபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல்இருக்க என்ன நடவடிக்கை மேற்க்கொண்டுள்ளனர்? என்பதை இந்த அவையில் தெரிவிக்கவேண்டும். இரவு நேரத்தில் தனியாக வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள் என்பதுபோன்ற அறிவுரையைதான் அரசு வழங்குகின்றது.
தங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக, கால் சென்டர்களில் வேலை செய்து விட்டு, நள்ளிரவு நேரத்தில் வீடுதிரும்பும், நடுத்தர வர்க்க பெண்களின் கதி என்ன? ஆண் நண்பரின் துணையுடன் இரவு 9.30 மணிக்கு பேருந்தில் பயணித்த மாணவிக்கு இந்நிலை ஏற்பட்டிருப்பதை நாம் அனைவரும் கண்டிப்பதுடன் நிறுத்தி விடக் கூடாது.
குற்றவாளிகளை விரைவாக கண்டு பிடித்து, விசாரிக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு தூக்குதண்டனை வழங்க வேண்டும் என்றார்.
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.