ஹிண்டு காங்கிரஸ கோயபெல்ஸ்

 ஒருவர் வெற்றி பெற்றால் அவரை பாராட்டுவதும்..மரணமடைந்து விட்டால் அவரது நற்குணங்களை சுட்டிக்காட்டி புகழ்வதும்…நம்நாட்டின் பண்பாடு.. இந்த பண்பாடும், நாகரீகமும், மாநிலத்துக்கு மாநிலம மாறுபடுவதில்லை…எல்லா மாநிலத்திலும் பின் பற்றப்படுவதுதான்..

ஆனால் காங்கிரஸ் கட்சியும் ”இந்துப்” பத்திரிக்கையும் என்.டி.டி.வியும் இதற்கு விதி விலக்கு! தேர்தல் முடிவுகளை மீடியாக்கள் அலசிக்கொண்டிருக்கும் போது, அதில் பங்கு பெற்ற காங்கிரசின் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் மோடியை புழுதி வாரி தூற்றினார்…

இந்தியாவிலுள்ள அனைத்து மதசார்பற்ற சக்திகளும் ஒன்று சேர்ந்து, குஜராத்தில் முகாமிட்டு மோடியை தோற்கடித்திருக்க வேண்டும்…என்றார். தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈ.வீ.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் , மோடியை, “ ஒரு மதவாதி…வன்முறையாளர், பிற்போக்குவாதி, “ என்றெல்லாம் திட்டி தீர்த்தார்.

அதற்கு பதிலடியாக நான் சொன்னேன்..” 6 கோடி குஜராத்திகளால் ஜனநாயக முறைப்படி , தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வரை, இப்படி கண்ணியக்குறைவாக பேச காங்கிரஸ் உங்களுக்கு சொல்லிக்கொடுதிருக்கிறதா?”..என்றேன்.

1950 முதல் 2000 மாவது ஆண்டுவரையிலான 50 ஆண்டுகளில் இந்தியாவில நடந்த மதக்கலவரங்கள் சுமார் 1194..அதில் சுமார் 80 சதம் காங்கிரசின் பிரதமர்கள் , திரு நேரு, திருமதி. இந்திரா காந்தி, திரு ராஜீவ் காந்தி ஆகியோர் காலத்தில் நடை பெற்றது..இதில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை கொன்றுகுவித்தது காங்கிரஸ் கட்சிதான்..இதற்காக இவர்களுக்கு கிடைத்த பரிசு மூன்று “பாரத ரத்னா”..பட்டம்

இப்படி கலவரங்களை உண்டாக்கி முஸ்லீம்களை கொன்று குவித்த காங்கிரசுக்கு மதசார்பற்ற தன்மை பற்றி பேச அருகதை கிடையாது—என பீட்டருக்கு நான் பதிலளித்தேன். மாறாக இமாச்சலத்தில் தோல்வியை தழுவிய பாஜகவின் முதல்வர் பிரேம் குமார் தூமல்..”மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன்” என்றார். காங்கிரசின் ராகுலையோ, சோனியாவையோ அவர் அவதூறாக பேசவில்லை. கட்சிகளுக்குள்ளே கலாச்சார மாறுபாடுகளை பாருங்கள்..

. மோடி மதவாதியாக இருந்திருந்தால் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்த 19 தொகுதிகளில் 12 தொகுதியை பாஜக எப்படி ஜெயித்து இருக்க முடியும்?.. உண்மையை ஏற்றுக்கொள்ள என்றும் இவர்கள் தயாரில்லை..

வெற்றி பெற்ற மோடிக்கு வாழ்த்து சொல்ல தயாரில்லாத..( தகுதியில்லாத பத்த்ரிக்கை என்று நான் சொல்வேன்..) இந்து பத்திரிக்கை இப்படி தலையங்கம் எழுதியது.. “ மோடி…அவருடைய காட்டின் அரசன்…( KING OF HIS JUNGLE ) முஸ்லீம்களை கொன்று குவித்தவர்…டெல்லிக்கு படையெடுக்க முயற்சிக்கிறார்”—என்ன அநாகரீகம்..என்ன வயிற்றெரிச்சல்…

மோடி மதவெறியனாக இருந்திருந்தால்….2002 குஜ்ராத் கலவரத்தில் ஒரு இந்து கூட சுடப்பட்டுரிக்க கூடாது…மரணமடைந்திருக்கக் கூடாது…கைது செய்யப்பட்டு இருக்கக்கூடாது…..தண்டிக்க பட்டு இருக்கக்கூடாது..

ஆனால் துப்பாக்கி சூட்டில்…இந்து 193 பேர் முஸ்லீம் 77.. பேர் கொல்லப்பட்டதில் இந்து 283 பேர்..முஸ்லீம்..788 பேர் கைது செய்யப்பட்டதில் இந்து 27,000 பேர்..முஸ்லீம் 7000 பேர்

இவ்வளவு உண்மைகளுக்கிடையே பொய்யை திரும்பத் திரும்ப சொல்லும்  கோயபெல்ஸ் இந்து பத்திரிக்கை—-என்.டி.டி.வி. மற்றும் காங்கிரசை என்ன செய்வது….. குஜராத்தைப் போல…2014 லில்..டெல்லியையும் பிடிப்பத்தே இவரகளுக்கு பாடம் புகட்டும் ஒரே வழி.

நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர்

One response to “ஹிண்டு காங்கிரஸ கோயபெல்ஸ்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...