ஏன் ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஜோதிட ஆலோசனை தேவை?

 ஏன் ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஜோதிட ஆலோசனை தேவை? எம்மிடம் ஒருவர் ஜோதிட ஆலோசனை கேட்க வந்திருந்தார்;அவர் இப்போதுதான் பி.டெக்.படிப்பு முடித்து,ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் சேரத் தயாராக இருந்தார்;சுமாராக இரண்டு மணி நேரம் வரை ஜோதிட ஆலோசனைகளைக்கேட்டு, எமது ஆலோசனைகளை அவரது டைரியில் குறித்துக் கொண்டார்;கூடவே,எமது பேச்சையும் பதிந்து கொண்டார்;

சில வாரங்களுக்குப் பின்னர், இனிப்புகள்,பழங்களோடு வந்து மீண்டும் சந்தித்தார்;எமக்கு ஒன்றும் புரியவில்லை; அவர் ஒரே ஒரு வரிதான் சொன்னார்: நீங்கள் சொன்னதை அப்படியே நம்பி எனது ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டேன்;இன்று எனது தினசரி வாழ்க்கை மிக சிறப்பாக அமைந்துவிட்டது;என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்;அவர் சென்றதும் அவரது ஜாதக நகலை மீண்டும் ஒரு முறை(ஓய்வு நேரம் இருந்ததால்) புரட்டிப்பார்க்க முடிந்தது;

அவர் தமது பி.டெக்.,படிப்பின் கடைசி ஆண்டு ஆரம்பமானதிலிருந்து சுமார் மூன்று ஜோதிடர்களை சந்தித்திருக்கிறார்;அவர்கள் ஒவ்வொருவரின் ஆலோசனையையும் பின்பற்றவும் செய்திருக்கிறார்;அந்த ஆலோசனைகள் அவரது தினசரி வாழ்க்கையை மென்மை ஆக்கவில்லை;அனைவரும் அவருக்கு நேரடியான பதிலைத் தர வில்லை;பூடகமாகவும் புரியாமலும் சொல்லியிருந்ததால் அவருக்கு குழப்பம் வந்திருக்கிறது;கேம்பஸ் இண்டர்வியூவினால் தாம் வேலைக்குச் சேருவோமா? என்ற பயம் அவருக்கு இருந்திருக்கிறது;

எமது ஆலோசனை அவருக்கு அவரது தினசரி வாழ்க்கையை சுலபமாக்கியிருக்கிறது;யாரையெல்லாம் தவிர்த்தாரோ,அவர்களே இவருக்கு உதவி செய்யப்பிறந்தவர்கள் என்பது புரிந்திருக்கிறது;யாருடன் எல்லாம் நெருங்கிப் பழகினாரோ அவர்கள் இவருக்கு குழி பறிக்கும் வேலை திட்டமிட்டும்,நேர்த்தியாகவும் செய்திருக்கிறார்கள்;இவை அனைத்திற்கும் காரணம் இவரது அணுகுமுறையே காரணம் என்பதை எம்மிடம் ஆலோசனை கேட்ட இரண்டு மணி நேரத்தில் அவருக்குப் புரிந்து விட்டது;மரத்தடி ஜோதிடரோ,ஸ்டார் ஹோட்டல் ஜோதிடரோ,வலைப்பூ மூலமாக எழுதி பிரபலமாகும் ஜோதிடரோ யாராக இருந்தாலும் தம்மிடம் ஜோதிடம் கேட்க வரும்(அணுகும்) ஜாதகர்களின் மனநிலை,சூழ்நிலைக்கு ஏற்றாற்போல பலன்களைச் சொல்ல வேண்டும்;அடிக்கடி தொடர்பில் இருப்பவர்களை வாழ்வின் வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் விதமாக ஆலோசனைகளை வழங்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஜோதிடம் பார்க்க வருபவர்களும் இவரது ஆலோசனையைப்பின்பற்றிப்  பார்ப்போமே? என்ற முடிவோடு வர வேண்டும்;இவரது ஜோதிட ஆலோசனையை குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை பின்பற்றிப் பார்க்க வேண்டும்;ஒவ்வொரு ஜோதிட ஆலோசனையை பின்பற்றும் போதும் ‘பகுத்தறிவை’ப் பயன்படுத்த வேண்டும்;உதாரணமாக,மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சிகப்பு நிறமும்,செவ்வாய்க்கிழமையும்,ஒன்பதாம் எண்ணும் யோகத்தைத் தரும் என்பது உண்மை;வெகு அரிதான சில மீன லக்னத்தினருக்கு இது பொருந்தாது;மீன லக்னத்தினர் ஒரு வேலைக்கான இண்டர்வியூவிற்குச் செல்லும்போது சிகப்பு நிற ஆடையைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும்;காலை ஒன்பது மணிக்கே நேர்காணலுக்கான இடத்திற்குச் சென்று விட வேண்டும்;தாம் பயன்படுத்தும் செல் எண்ணின் ஒட்டு மொத்த கூட்டுத்தொகையை ஒன்பது வரும் விதமாக மாற்றிக் கொள்ள வேண்டும்;இவ்வாறு மாற்றியப் பின்னர்,சுமார் ஆறு மாதங்கள் வரை இந்த மாற்றத்தினால் முன்னேற்றம்,வெற்றி கிடைக்கிறதா? என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்;இவையெல்லாம் எந்த ஜோதிடர் சொல்கிறாரோ,அவரை மீண்டும் ஒரு சில முறை சென்று சந்திக்க வேண்டும்;சுமாராக நான்கு முதல் பத்து தடவை ஒரே ஜோதிடரின் ஆலோசனையைப் பின்பற்றி முன்னேற்றம் வந்தப்பின்னர்,அவரையே ஆஸ்தான ஜோதிடராக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்;

 பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,நமது பாட்டானார்களுக்கும் பாட்டனார்களுக்கும் பாட்டனார்கள் ஜோதிடத்திலும்,ஆன்மீகத்திலும் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்து,அவைகளள ஓலைச்சுவடிகளாக எழுதிக் குவித்துள்ளனர்;இந்த ஓலைச் சுவடிகளில் சுமார் எண்பது சதவீதம் தற்போது ஜர்மனியிலும்,அமெரிக்காவிலும்,இங்கிலாந்திலும் ஆராய்ச்சி செய்யப்பட்டு அவர்களின் பாடத்திட்டங்களிலும்,ஹாலிவுட் சினிமாக்களிலும் சேர்க்கப்பட்டு வருகின்றன.டாம்ப் ரைடர்,மம்மி ரிட்டர்ன்ஸ் போன்ற திரைப்படங்களே இதற்கு ஆதாரங்கள் ஆகும்.ஆனால்,நமது மதச்சார்பின்மை இந்தியாவிலோ இவைகளை கேலியும் கிண்டலும் செய்யும் போக்கு உருவாகிவிட்டது;

விநாயகப்பெருமானை வழிபாடு செய்ய ஏற்ற நாள்:வாரத்தின் எந்த நாளாக இருந்தாலும் சிறப்பே! ஏற்ற நேரம் எந்த நேரமாக இருந்தாலும் ஓ/கே!!! ஏனெனில்,கடவுள்களில் மிக மிக மிக எளியவர் இவர் மட்டுமே!!! இவரை விடவும் எளியவர் நம்ம ஸ்ரீகால பைரவர்!!! ஸ்ரீகாலபைரவரை வழிபட கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டே ஆக வேண்டும்.வேறு எந்த கட்டுப்பாடும் கிடையாது.

ஸ்ரீபத்திரகாளியை ஒரு வாரத்தில் எந்த நாளில் வழிபட்டால் முழுமையான அருள் கிடைக்கும்? என்பதை பல ஆண்டுகளாக நமது முன்னோர்கள் வழிபட்டு,வழிபட்டு கண்டறிந்ததே ஞாயிற்றுக் கிழமை அன்று வரும் இராகு காலம் என்பதை கண்டறிந்தனர்.

ஸ்ரீசொர்ண பைரவரை வழிபட ஏற்ற நாள் எது? என்பதை நமது ஆன்மீகக்குருப் பரம்பரையினர் வனதியானத்தின் மூலமாகவும்,ஒன்பது ஆண்டுகள் தினசரி தியானத்தின் மூலமாகவும் கண்டறிந்தனர்;அந்த நாளே தேய்பிறை அஷ்டமியன்று வரும் இராகு காலம் ஆகும்.

இதே நாளன்று ஸ்ரீகால பைரவரையும் வழிபடலாம்;அதே சமயம்,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி இருப்பவர்கள் ஸ்ரீகால பைரவரை வழிபட ஏற்ற நாள் சனிக்கிழமை;ஏற்ற நேரம் சனிக்கிழமை அன்று வரும் இராகு காலம்! ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்க ஏற்ற நாள் அமாவாசை.ஏற்ற நேரம் அமாவாசையன்று காலை நான்கு முப்பது முதல் ஆறு மணிக்குள்!ஓம்சிவசிவஓம் மந்திரம் மட்டுமல்ல;எந்த ஒரு மந்திரத்தையும்,அது வைஷ்ணவ மந்திரமாக இருந்தாலும் சரி,அம்மன் மந்திரமாக இருந்தாலும் சரி,ஐயப்பனின் மந்திரமாக இருந்தாலும் சரி,

முருகக் கடவுளை வழிபாடு செய்ய ஏற்ற நாள் செவ்வாய்க்கிழமை ஆகும். ஏற்ற நேரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஐந்து மணி முதல் ஏழு மணிக்குள்! குல தெய்வத்தை வழிபட ஏற்ற நாள் வியாழக்கிழமை ஆகும்.நமது வாழ்க்கை வேகத்தினால் நாம் ஞாயிற்றுக்கிழமை வழிபடச் செல்கிறோம்;அல்லது மஹாசிவராத்திரி அன்று மட்டுமே வழிபடச் செல்கிறோம்.

மேலே கூறிய பத்திகளை ஒருசில நிமிடங்களில் வாசித்துவிட்டீர்கள்;இதில் மறைந்திருக்கும் ஆன்மீக வலிமைகளையும்,சக்தியையும் அறிய நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு ஆண்டுகள் பாடுபட்டிருப்பார்கள் தெரியுமா? இது தொடர்பாக இதுவரை இந்தியாவிலும்,வெளிநாட்டிலும் ஒருவராவது ஒரு ஆவணப் படமாவது எடுத்திருப்பார்களா? நிச்சயமாக இல்லை;நமது முன்னோர்களின் ஜோதிட ஆராய்ச்சி முடிவுகள்,ஆன்மீகப்பொக்கிஷங்கள், அரசு நிர்வாகக் கலை;உளவுப்பணி, கப்பல் கட்டுதல்,வாகன வடிவமைப்பு,கட்டிடம் கட்டுமானம்,ஆரோக்கியம்,மூலிகைகள் பயிரிடுதல்,பராமரித்தல்,ஆரோக்கியத்தை தரும் மூலிகை மருந்துகள் தயாரித்தல்,மனத்தையும் உடலையும் செம்மைப்படுத்தும் யோகாசனக்கலை, தியானம் செய்யும் விதம் போன்றவைகளின் உள்ளார்ந்த பெருமைகளே இன்னும் நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லையே?இவைகளெல்லாம் தெரிந்தால் நமது பாரத நாடு அடுத்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு இந்த பூமியின் ஒரே வல்லரசாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை;எனக்கு நமது முன்னோர்களின் பெருமைகளை ஊட்டியது ராஷ்டீரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் பயிற்சிகள் மட்டுமே!!!

ஆன்மீக முன்னேற்றத்துக்கு சரியான ஜோதிட ஆலோசனை இருந்தால்,அது எதற்கு ஈடாகும் தெரியுமா? உங்கள் முன்னோர்கள் ஆயிரம்கோடி ரூபாய்கள் மதிப்புள்ள சொத்துக்களை புதையலாக இட்டுச் சென்றுள்ளார்கள்;அதை அடைவதற்கான வரைபடம் உங்களுக்குக் கிடைத்துவிட்டது;அந்த வரைபடத்தின் படி அதை அடையும் வழிமுறையைச் சொல்லிக்கொடுப்பவர் ஒருவர் உங்களது ஆத்ம நண்பராகவே அமைந்துவிட்டால்? அதற்கும் ஈடானது ஆகும்.

ஒருவேளை அப்படிப்பட்ட வழிகாட்டி அமையாமல் போய்விட்டால்,நாம் நமது வாழ்நாள் முழுக்கவும் அந்த வரைபடத்தை வைத்துக்கொண்டு துழாவிக் கொண்டே இருப்போம்;கைக்கு எட்டியது கண்ணுக்கு எட்டாமலேயே போய்விடும்!?! இந்த சூழ்நிலையில் தான் இன்றைய இந்து தர்மத்தின் சூழ்நிலை அமைந்திருக்கிறது;இந்த சூழ்நிலையில் தான் இந்தியாவின் அரசியல் நடைமுறை வீழ்ந்து கிடக்கிறது.இந்த சூழநிலையில் தான் நாம் ஒவ்வொருவரும் பிரகாசமான எதிர்காலத்தை எண்ணியும்,இருண்ட நிகழ்காலத்தை நினைத்தும் தவிக்கிறோம்.

நன்றி; ஜோதிடமுனி கை.வீரமுனி, ஸ்ரீவில்லிபுத்தூர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதி ...

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி 'பெஞ்சல்' புயல், தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து, ...

மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வே ...

மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வேண்டும் – அண்ணாமலை எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் வெற்றி ...

புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக ...

புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக்கும் – பிரதமர் மோடி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து பயன்படுத்தப்படும், ஐ.பி.சி., எனப்படும் ...

மூன்று குற்றவியல் சட்டங்களை நி ...

மூன்று குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றிய நீதிபதிகளுக்கு நன்றி – பிரதமர் மோடி 'புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரல ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு – அமைச்சர் ஜெய் சங்கர் ''அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அம ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அமைச்சர்களுடன் பார்த்த பிரதமர் மோடி குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.