தேர்தல் கூட்டணிக்கு, வேறுகாரணங்களை முதல்வர் ஜெயலலிதா கூறுவது குறித்து எங்களுக்கு கவலையில்லை, காவிரி விவகாரத்தில் தமிழக பாரதிய ஜனதா மீது பழி சுமத்தும் வகையில், முதல்வர் ஜெயலலிதா கூறுவதை ஏற்கமுடியாது என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா, காவிரி விவகாரத்தில் பா.ஜ., காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும், தமிழகத்திற்கு துரோகம் செய்கின்றன. இதனால், இந்தகட்சிகளோடு, லோக்சபா தேர்தலில் கூட்டணி வைக்காமல், தனித்து போட்டி யிடுவோம் என்று , குறிப்பிட்டார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் காவிரி விவகாரத்தில், பாரதிய ஜனதாவை குறை கூறுவதை ஏற்கமுடியாது.
லோக் சபா தேர்தலில், அதிமுக., எந்த நிலை எடுத்தாலும், அது குறித்து நாங்கள் கருத்துசொல்ல விரும்பவில்லை. அது, அவர்கள் கட்சியின் முடிவு; அதில், தலையிட முடியாது.ஆனால், காவிரி விவகாரத்தில் , பாரதிய ஜனதா துரோகம் செய்துவிட்டது என்று , முதல்வர் ஜெயலலிதா கூறுவதை ஏற்கமுடியாது.
காவிரிப் பிரச்னை உச்ச கட்டத்தை அடைவதற்கு முன்பே, இரண்டு மாநில அரசுகளும் பேச்சுநடத்த வேண்டும். மத்திய அரசும் தலையிட்டு, உரிய முடிவெடுக்கவேண்டும் என்று , தமிழக பா.ஜ., வலியுறுத்தியது. நீதிமன்ற தீர்ப்புகளை ஏற்றுகொள்ளாமல் , தண்ணீர் தரமாட்டோம் என்று , கூறிய கர்நாடக அரசை கண்டித்ததோடு, தமிழக முதல்வர் எடுக்கும் எந்தமுடிவுக்கும், துணையாக இருப்போம் என்றும் , தமிழக பாரதிய ஜனதா அறிவித்தது. அனைத்து கட்சிகளும் கர்நாடகத்தில் இணைந்து செயல் பட்டன. ஆனால், தமிழகத்தில் அனைத்து கட்சிகளை இணைத்து கூட்டம் நடத்தவேண்டும் என்றும தமிழக எம்பி.,க்களை ஒன்றிணைத்து, பிரதமரை சந்திக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
இதற்கெல்லாம் அதிமுக., அரசு மசிய வில்லை. மேலும், கர்நாடகத்தில் இருக்கும் அதிமுக., தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று , கர்நாடகத்தில் போராட்டம் நடத்த வில்லை.கர்நாடகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் காவிரி விவகாரத்தில் ஒன்றாகநின்றன. இந்த நிலையில், பாரதிய ஜனதா மீது பழி சுமத்தும் வகையில், முதல்வர் ஜெயலலிதா கூறுவதை ஏற்கமுடியாது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.