குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதல்வர் பதவி ஏற்றுள்ள நரேந்திரமோடிக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பி. ஆரோன் ஸ்ஷோக் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இல்லிநாய்ஸ் மாகாணத்தின் குடியரசு கட்சியின் எம்பி.யான ஆரோன், அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் மோடி வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தை நோக்கி ஏராளமான தொழில் நிறுவனங்கள் செல்கின்றன . குஜராத்தில் எல்லோரும் முன்னேறும்வகையில் பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்.
இதற்குமுன்பு 2 முறை அவர் முதல்வராக பதவி ஏற்று சிறந்தமுறையில் ஆட்சிசெய்ததால் 3-வது முறையும் படித்தவர்கள், தொழிலதிபர்கள், மதவாதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களின் ஆதரவோடு மோடி வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைபிடித்துள்ளார். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் சாதாரணமாக யாரும் தேர்ந்தெடுக்க படுவதில்லை. அவர்களின் ஆட்சியின்கீழ் நிர்வாகம் நல்ல முறையில் இருக்கிறதா என்பதை மக்கள் உன்னிப்பாக கவனித்துத் தான் ஒருமுடிவுக்கு வருகிறார்கள் . கடந்த பத்து வருடத்தில் நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத் தொழில் வளம் பெருகி பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது என்றும் ஆரோன் தெரிவித்தார்.
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.