காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்தாலும் , அவரை போட்டியாக கருதமுடியாது என்று பாஜக செய்தித்தொடர்பாளர் ஷநவாஸ் ஹுசைன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது; காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்திக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டிருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அவர் ஏற்கெனவே சோனியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில்தான் இருந்துவருகிறார். நேரு-காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்களால் மட்டுமே இந்த இடத்துக்கு வரமுடியும்.
ராகுல் காந்தி தலைவராக நியமிக்கப்பட்டால்கூட, அவரை பா.ஜ.க.,வுக்கு போட்டியாகக் கருதமுடியாது. காங்கிரஸ் கட்சிக்கு எதிர் காலமே இல்லை என்று தெரிவித்தார்
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.