காங்கிரஸ்சில தகுதி இல்லாதவர்களுக்கு எந்த பதவி வேண்டும் என்றாலும் கிடைக்கலாம் என்பதற்கு தற்போது அந்த கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப் பட்டுள்ள ராகுல்காந்தியே உதாரணம் என்று மேல்-சபை எதிர்க் கட்சி தலைவரும், பாரதிய ஜனதாவின் மூத்த தலைவருமான அருண்ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை ஒருவரின்கையில் ஒப்படைக்கிறார்கள். இது காங்கிரஸ்சின் பரம்பரை ஜனநாயகத்தை எடுத்து காட்டுகிறது. கடும் விலைவாசி உயர்வு, ஆட்சி நிர்வாக குளறுபடி , ஊழல் போன்ற கேள்விகளுக்கு காங்கிரஸ் மாநாட்டில் பதில் தரப்படவில்லை .
இந்த எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரேபதிலாக, உலகின் பெரிய ஜனநாயக_நாடான இந்தியாவை, ஒரு பரம்பரை ஜனநாயகமாக மாற்றி உள்ளனர். பல பிரச்சினைகளில் ஒருவரது உண்மை நிலை என்ன என்பது குறித்து அறியாமல் அவருக்கு பெரிய ஜனநாயக நாட்டின் தலைமைபொறுப்பை வழங்கமுடியாது.
பாரதிய ஜனதா அப்படிப்பட்ட கட்சியல்ல. கட்சியில் தகுதி, திறமைவாய்ந்த ஒருவருக்கே பதவிகிடைக்கும். சாதி, குடும்ப அரசியலுக்கு இங்கு இடமில்லை. கட்சியில் தகுதி உள்ளவர்களுக்கு பதவிகள்கிடைக்கும் என்ற நிலை உள்ளது என்று அருண் ஜெட்லி கூறினார்.
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.