காமன்வெல்த் போட்டி ஊழல்தொடர்பாக சுரேஷ் கல்மாடியின் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ளதை போன்று , பிரதமர் நியமித்த சுங்லு கமிட்டி குற்றம் சுமத்திய முதல்வர் ஷீலா தீட்சித்தின் மீதும நடவடிக்கை எடுக்கவேண்டும் என பா.ஜ.க.,வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ரவிசங்கர்பிரசாத் கூறியதாவது:காமன்வெல்த் போட்டி ஊழல் குறித்து காங்கிரஸ் எம்பி. சுரேஷ் கல்மாடியின் மீது குற்றப்பதிவு செய்யப் பட்டுள்ளதை பா.ஜ.க் வரவேற்கிறது.
இருப்பினும் , காமன்வெல்த் போட்டி ஊழல்குறித்து பிரதமர் நியமித்த சுங்லுகமிட்டி, ஷீலா தீட்சித்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால், அந்த அறிக்கையின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஷீலா தீட்சித் அரசுக்கும் முறை கேடுகளுக்கும் தொடர்புள்ளது என்பதை அந்த கமிட்டி ஆதாரப் பூர்வமாக தெரிவித்துள்ளது .ஆனால் அவர் மீது இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? சுங்லு கமிட்டி, யார் மீது குற்றம் சுமத்தினாலும் அவர்கள் யாராகயிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்தார். அவர் கொடுத்த உறுதிமொழியை அவரே மீறிவிட்டார். என்று கூறினார்
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.