குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்கத் தொடங்கிவிட்டது என்பது ஜெர்மனின் தூதரின் விருந்தின் மூலம் வெளியாகியுள்ளது.
கடந்த 2002-ம் வருடம் குஜராத் கலவரத்த்தை காரணம் காட்டி
மேற்கத்திய நாடுகள் மோடியை புறக்கணித்து வந்தன. இது நீண்ட நாள் நீடிக்கவில்லை சென்ற வருடம் இங்கிலாந்து தூதர் குஜராத்தில் மோடியை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து பல நாடுகளும் மோடியின் மீதான தங்களது பார்வையை மாற்றிக் கொள்ளத்தொடங்கின.
இந்நிலையில் குஜராத் மாநில முதல்வராக கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் நரேந்திரமோடி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து மோடிக்கு எதிரான தங்களது 10 ஆண்டுகால புறக்கணிப்பை கைவிட ஐரோப்பியஒன்றிய உறுப்பு நாடுகள் தீர்மானித்துள்ளன .
இதன் ஒருபகுதியாகதான் சென்ற மாதம் ஜனவரி 7-ந் தேதி டெல்லியில் ஜெர்மன்தூதர் நரேந்திரமோடிக்கு ஒருவிருந்து கொடுத்திருக்கிறார். இந்த விருந்தில் இதரநாட்டு தூதர்களும் கலந்துகொண்டிருக்கின்றனர்.
இந்தசெய்தி ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப் படமாலேயே இருந்தது. தற்போது தான் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியதூதர் ஹார்வின்ஹோ, மோடியை ஒரு மிகமுக்கியமான அரசியல் சக்தியாக பார்க்கிறோம். இப்பொழுது குஜராத் எப்படி இருக்கிறது என்பது கவனிக்க தக்கது என்றார் .
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.