காதல் என்றால் என்ன ? அது ஏன் அழகான பெண்களை மட்டுமே அனைவரும் காதலிக்கிறார்கள் ? ஒரு கருப்பாயியை அல்லது குப்பாயியை பார்க்கும் போது ஏன் காதல் வருவதில்லை ?
இதில் கண்டதும் காதலாம் ? காமவெறிக்கு போடப்பட்ட சாயம்தானே இந்த காதல் ?
காமத்தையே இலக்காக வைத்த இந்த கள்ளத்தனம் காதலா ? இல்லை ஒருவரோடு ஒருவர் பழகி, புரிந்துக் கொண்டு, வேற்றுமைகளை இரசித்து, அன்பை எதிர்பார்ப்பில்லாமல் பொழிவது காதலா ?
ஒரு ஆண் அல்லது பெண்னை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்பது காதலா ?
காதலித்த ஒரு ஆண் அல்லது பெண் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்பது காதலா ?
முந்தையது காமத்தின் வெளிப்பாடு. அது சுயநலம் சார்ந்தது. உடல் இச்சைகளின் தாக்கமே மேலோங்கி இருக்கும். இரண்டாவது அன்பின் வெளிப்பாடு. அது சுயநலமில்லாதது. நம் அடிப்படையான இயல்புநிலை.
வினோதனி என்ற இளம்பெண் ஆசிட் வீசி இறந்திருக்கிறார். அவளை அடைய முடியாத ஒரு காமவெறியனின் செயல்பாடு இது. உண்மையான காதல் அவனிடம் இருந்திருந்தால் அவள் நன்றாக இருக்க வேண்டும் என்றல்லவா நினைத்திருப்பான் ?
இந்த கேடு கெட்ட காமவெறிக்கு, காதல் என்று பெயராம். அதற்கு தனியாக ஒரு தினமாம். காம களியாட்ட தினம் !!. இதற்காக ஒரு பாதிரியார் பாடுபட்டாராம் !! இளைஞர்கள் மனதில் எப்படி நஞ்சை ஏற்றுகிறார்கள் பாருங்கள் ?
பன்னாட்டு கம்பெனிகள் இளைஞர்களை வைத்து சம்பாதிக்க அருமையான ஒரு தினம். மேற்கில் தலைவரித்து ஆடும் "டேட்டிங்" கலாச்சாரம் இந்த காம களியாட்ட தினத்தின் மூலமாக இன்னும் வலு பெறுகிறது. ஏமாற போகும் பெண்களின் கூக்குரல் இப்பொழுதே நம் காதுகளில் கேட்கத் தொடங்குகிறது. இந்தியாவில் திடமாய் கால்பதித்துள்ள மேற்கத்திய ஊடகங்கள் இதற்கு வக்காலத்து வாங்கி தங்கள் வியாபாரத்தை பெருக்குகின்றன.
அதிகமாய் நாம் பேசினால் இருக்கவே இருக்கிறது "தனி மனித சுதந்திரம்".
பழமைவாதிகள் என்ற அடைமொழி.
Thanks; Enlightened Master
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.