இத்தாலியிடம் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் நடந்த ஊழல்தொடர்பாக விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவை (ஜே.பி.சி.) அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ராஜ்ய சபாவில் இருந்து வெளிநடப்புசெய்தன.
ஹெலிகாப்டர் ஊழல் குறித்த விவாதம் ராஜ்ய சபாவில் நடந்தது. அப்போது இந்த ஹெலிகாப்டர் ஊழல் குறித்து விசாரிக்க 30 லோக்சபா, ராஜ்ய சபா எம்.பி.,க்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜே.பி.சி.) அமைக்கும் தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல் நாத் கொண்டுவந்தார்.
இந்த தீர்மானத்தின் மீது நடந்தவிவாதத்தில் பேசிய பாஜக, ஐக்கிய ஜனதா தளம், திரிணமூல்_காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், அசாம் கணபரிஷத் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், இந்த விவகாரத்தை திசைதிருப்பி, மூடிமறைக்கவே ஜேபிசி. அமைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தினர் . பிறகு வெளிநடப்பும் செய்தனர்.
முன்னதாக மிகப்பரபரப்பாக நடந்த விவாதத்தில் பாஜக. எம்.பி. பிரகாஷ் ஜவேத்கர் பேசியதாவது ,
மிகமிக ஊழல் மலிந்துள்ள ராணுவ அமைச்சகத்துக்கு ஏகே.ஆண்டணி தலைமை வகித்துவருகிறார். இந்த ஊழல் பற்றி அவர் பதில்சொல்லியே ஆக வேண்டும். ஒவ்வொரு ஊழல் வெளிவரும் போதும் முதலில் அதை காங்கிரஸ் கட்சி மறுக்கிறது. இரண்டாவதாக ஊழல் உறுதியானதும் விசாரணையை தாமதம் செய்கிறது. மூன்றாவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் மீது பழிபோடுகிறது. நான்காவதாக நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கிறது. அதுவும் வேண்டாவெறுப்பாக, அரை குறை மனதோடு நடவடிக்கை எடுக்கிறது என்றார்.
பாரதீய ஜனதாவின் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி பேசியதாவது ,
இத்தாலியில் நடந்த இவ்வளவு பெரியஊழலை 30 பேர்கொண்ட இந்திய எம்.பி.,க்கள் குழுவால் எப்படி விசாரிக்கமுடியும்?. அந்த நாட்டிடம் விவரம்கேட்டு கடிதம் எழுதினால் அதற்கு பதில் தர கூட மறுக்கிறார்கள். இந்நிலையில், இந்தக்குழுவால் எப்படி இந்த ஊழலை விசாரிக்கமுடியும். அதுவும் இதன் தலைவராக இருக்க போகிறவர் காங்கிரஸ் தலைவர். எனவே இது ஜேபிசி அல்ல, இது சி.டபிள்யூ.சி (காங்கிரஸ் காரிய கமிட்டி).
இந்த வழக்கில் தொடர்புடைய வெளிநாட்டவர்களை நாடுகடத்தி, இங்கு அழைத்து வந்து காவலில் எடுத்து விசாரிக்கவேண்டும். இதற்கான அதிகாரம் ஜேபிசி.,க்கு இல்லை. இது வழக்கை திசைதிருப்பும் முயற்சி என்றார் அருண் ஜெட்லி,
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.