உயிருக்கு விளையும், மதிப்பும் நிர்ணயிக்கும் காங்கிரஸ்

 உயிருக்கு  விளையும், மதிப்பும் நிர்ணயிக்கும் காங்கிரஸ்உயிர் என்பது எல்லாம் ஒன்றுதான்..எல்லாம் ஒரே மரியாதைக்கு உட்பட்டதுதான். இதிலே மதமும் மாகாணமும் பணமும் படிப்புக்கும் இடமில்லை..

இதை சாதாரண பாமரன்கூட ஏற்றுக்கொள்கிறான். அரசியல் வாதியைத்தவிர. அதிலும் கடைந்தெடுத்த கான்கிரச்காரனைத்தவிர

ராகுல் காந்தி –உ.பி.யில் “குண்டாஸ்” களால் கொல்லப்பட்ட துணை போலிஸ் சூப்ப்ரன்ட்– ஜியாஉல் ஹக் அவர்கள் கிராமத்திற்கு ரகசிய திடீர் விஜயம் செய்து அவருடைய மனைவி பிரவீன் ஆசாத்தை பார்த்து ஆறுதல் கூறினார் —செய்தி

இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது எல்லா அரசியல் தலைவரும் செய்வதுதானே? என்று நீங்கள் கேட்பது புரிகிறது ..

இதில் எவ்வளவு ஆச்சரியம் இருக்கிறது /–என்னென்ன ஆச்சரியம் இருக்கிறது?–பார்ப்போமா?

1..காலை 11.40 க்கு கோரக்பூர் ஏர்போர்ட்டில் வந்திறங்கிய ராகுல் காந்தி, 1.மணி 20 நிமிடம் புழுதி படர்ந்த கிராமசாலை களில் பயணம் செய்து கொல்லப்பட்ட டி.எஸ்.பி. ஜியாஉல் ஹக்கின் கிராமத்திற்கு சென்று அவரது மனைவியை சந்தித்து சுமார் ஒருமணி நேரம் ஆறுதல் கூறினார்..

2..இந்த ஆறுதல் போதாதென்று மறைந்த ஜியாஉல் ஹக் அடக்கம் செய்யப்பட்ட அவரது சொந்த கிராமத்திற்கு சென்று அவரது சமாதியிலும் அஞ்சலி செலுத்தினார்


பாமரனின் கேள்வி இதுதான்…

இதே பாசம் பரிதாபம்–ஆதங்கம் அன்பு–கருணை–ஆர்வம்–இதற்க்கு முன்பு “குண்டாஸ்”களால்–அல்லது தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பல போலிஸ் அதிகாரிகளின் மீது ராகுல் காந்திக்கு என் வரவில்லை?–அவர்கள் வீடுகளுக்கு என் செல்லவில்லை? எல்லா உயிர்களும் இறைவன் படைப்பில் ஒன்றுதானே…உயிரிகளின் மீது பிறக்கும்போது இறைவன் ஏதாவது “இது உயர்வு—இது தாழ்வு ” என “டேக் ” கட்டி அனுப்புகிறானா?

2008 செப்டம்பர் 13 டெல்லியில் 5 இடங்களில் பயங்கரவாதிகளால் குண்டுவைக்கப்பட்டு 30 பேர் கொல்லப்பட்டனர்==100 பேர் காயமடைந்தனர் ..அதற்க்கு காரணமான  பயங்கரவாதிகள் “பாட் லா ஹவுஸ் ” என்னும் இடத்தில் இருக்கின்றனர என்ற தகவல் கிடைத்து அவர்களை பிடிக்கும் போது அவர்களால் சுடப்பட்டு இறந்த இன்ஸ்பெக்டர் மோகன் சந்த சர்மாவின் வீட்டுக்கு ராகுல் காந்தி என் செல்லவில்லை

அத்திப் அமீன்–முஹமது சஜித் என்பவர்கள் கொல்லப்பட்ட பயங்கர வாதிகள்.–கொல்லப்பட்டவர் உயிரின் மீது “உயர்ந்தவர் ” என்ற ” டேக்” ஐ யும் இன்ஸ்பெக்டர் மோகன் சர்மாவின் உயிரின் மீது “தாழ்ந்தவர் ” என்ற ” டேகையும் ” இறைவன் கட்டி அனுப்பியிருந்தானா?

பயங்கரவாதிகளை கொன்றதற்கு முலயாமும், மாயாவதியும் மனித உரிமை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரவித்தனர்–இது புதுவகையான போலி என்கவுண்டர் என்றனர்..தில்லி ஹைகொர்ட்டூம், வழக்கை ஏற்று 21.5.2009 அன்று
மனிதஉரிமை கமிஷனுக்கு விசாரிக்க அனுப்பியது..

மனித உரிமை கமிஷனும் 22.7.2009 இல் “இது போலி என்கவுண்டர் அல்ல ” மனித உரிமை மீறல் இல்லை ” கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள்தான் ” என தீர்ப்பு கூறியது.

ஒருவேளை ராஹுல் காந்தி–இது போலி என்கவுண்டர் என நினைத்து இன்ஸ்பெக்டர் மோகன் சந்த சர்மாவின் வீட்டிற்கு போகாமல் இருந்திருந்தாலும் மனித உரிமை கமிஷனின் ” கிளீன் சிட்டிற்கு ” பிறகாவது சென்றுரிக்க வேண்டுமல்லவா? ..

ஏன் போகவில்லை என்று மண்டையை குழப்பவேண்டாம் ..

காங்கிரசின் கணக்கில் உயிர்களின் மதிப்பில் பல்வேறு விலையும்— வேறுபாடுகளும் உண்டு ..அது ஓட்டின் மதிப்பை பொறுத்தது..
புரிந்ததா ?

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்   மாநிலப் பொருளாளர்–பாஜக

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...