புதிய விசயங்களை கண்டுபிடிப்பவனும் , தனது கண்டுபிடிப்புகளை நல்ல விலைக்கு விற்பவனும் . காலத்துக்கு ஏற்ப சமயோகிதமாக முடிவுகளை எடுப்பவனும் , எத்தனை சிக்கல்கள் வந்தாலும் தன முடிவிலிருந்து பின் வாங்காதவனுமே ஒரு நல்ல வர்த்தகனாக இருக்க முடியும். ஒரு நல்ல வர்த்தகனுக்கே இத்தனை தகுதிகள் வேண்டும் என்றால்! , பல நல்ல வர்த்தகர்களை உருவாக்கும் வர்த்தக கல்வி நிறுவனங்களுக்கு எத்தனை எத்தனை தகுதிகள் வேண்டும். முதலில் தன்னை ஒரு நல்ல வர்த்தக கல்வி நிறுவனம் என சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவின் வர்டன் வர்த்தக கல்வி நிறுவனத்துக்கு அத்தகைய தகுதிதான் இருக்கிறதா?.
அமெரிக்காவின், பிலடெல்பியாவில் வர்டன் வர்த்தக கல்வி நிறுவனம் உள்ளது, அங்கு பயிலும் மாணவர்கள், நரேந்திர மோடியின் நிர்வாக திறமையை அறிந்து கொள்ள விரும்பினர். இதனை தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக மாணவர்களிடம் உரை நிகழ்த்த நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அவரும் வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக உரை நிகழ்த்த சம்மதித்தார்.
இந்நிலையில் கல்லூரியின் ஒரு சிறிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய குழு இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று கூறி நரேந்திர மோடியின் நிகழ்ச்சியை மட்டும் கல்லூரி நிவாகம் ரத்து செய்துள்ளது. ஏதோ ரயில் , பஸ் டிக்கெட்டை ரத்து செய்வதை போன்று ரத்து செய்துள்ளது . பெரும் பான்மையான மக்களின் ஆதரவை பெற்று மூன்றாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் ஒரு மாநில முதல்வருக்கே மரியாதை செலுத்த தெரியாத ஒரு கல்வி நிறுவனம் எப்படி ஒரு சிறந்த கல்வி நிறுவனமாக இருக்க முடியும்?.
எதிர்ப்பு என்பது எங்குதான் இல்லை ?, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையின் போது கூட ஒருபக்கம் போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் பாதிக்க பட்டவர்கள் போராடினர், மறுபக்கம் இடதுசாரிகள் என்றால் இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள் இப்படியாக மூன்று பக்கங்களும் போராட்ட மாகத்தான் இருந்தன, இதற்காக ஒபமாவின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதா?. அல்லது அவர் தான் திருப்பி அனுப்ப பட்டாரா?.
இந்தியாவில் எத்தனையோ முதல்வர்கள் இருக்க, மத்திய அமைச்சர்கள் இருக்க, ஏன் பாரத பிரதமர் அவருக்கு வழிகாட்டும் சோனியா காந்தி அவரின் புதல்வர் ராகுல் காந்தி இப்படி வரிசை கட்டி நிற்க்க நரேந்திர மோடி மட்டுமே வார்டன் கல்வி நிறுவனத்தின் கண்ணுக்கு தெரிந்தது அவருக்கு கிடைத்த பெருமை. ஒரு சிறிய குழுவின் எதிர்ப்புக்கு இணங்க பெரும் பான்மையான வர்களின் விருப்பத்தை நிராகரித்தது வர்டன் கல்வி நிறுவனத்துக்கு தான் சிறுமையே தவிர மோடிக்கு அல்ல.
அமெரிக்க பல்கலைக் கழகங்களை அதிகமாக ஆக்கிரமித்து இருக்கும் இடது சாரி எண்ணங்கள் கொண்ட பேராசிரியர்கள் இதற்க்கு காரணமாக இருக்கலாம். அரேபிய நாடுகளிலிருந்து அந்த கல்வி நிறுவனத்துக்கு அதிகமாக வந்து குவியும் நிதியில் ஏதேனும் துண்டு விழுந்து விடுமோ என்ற பயம் கூட நிகழ்ச்சி ரத்துக்கு காரணமாக இருக்கலாம் . ஆனால் இழப்பு என்னவோ மாணவர்களுக்கு தான்.
ஒரு வேலை மோடி அங்கே பேச அனுமதிக்கப் பட்டிருந்தால்
2001 இல் தனக்கே மின்சாரம் இல்லாமல் தள்ளாடி கொண்டிருந்த குஜராத். 2011இல் எப்படி மற்ற மாநிலங்களுக்கும் மிகை மின்சாரத்தை தருவிக்கும் மாநிலமாக மாறியது என்பது குறித்தும்.
டெல்லி உள்ளிட்ட தலை நகரங்களே மின்பற்றா குறையால் தலைகுப்பர படுத்திருக்கும் போது , குஜராத்தின் குக்கிராமங்கள் உள்ளிட்ட 18000 கிராமங்களையும் 24 மணி நேர தடையற்ற மின்சாரத்தினால் எப்படி தலை நிமிர செய்தார் என்பது குறித்தும்.
2001 இல் ரூ. 2246 கோடி நஷ்ட்டத்தில் இயங்கிய மின்சார வாரியத்தை , தற்போது 300 கோடிக்கும் மேல் இலாபத்துடன் இயங்கும் மின்வரியமாக எப்படி தூக்கி நிறுத்தினார் என்பது குறித்தும். தேசிய மின் இழப்பு சராசரியே 28 சதவிதம் என்றிருக்க குஜராத்தில் மட்டும் எப்படி 15 சதவிதமாக குறைந்தது என்பது குறித்தெல்லாம் பேசி ஒரு பொறியியல் துறை பேராசிரியராகவே அவர் மாறியிருக்கலாம்.
தேசிய அளவில் விவசாய வளர்ச்சி விகிதம் 3.3 சதவிதம் என்றிருக்க குஜராத்தில் மட்டும் விவசாய வளர்ச்சி விகிதம் 10.8 சதவிதம் என்பது எப்படி சாத்தியம் என்பது குறித்தும். மேலும் 2001 ஆம் ஆண்டு 14000 கோடியாக இருந்த விவசாய வருமானம் 96000 கோடி ரூபாயாக உயர்ந்தது குறித்தும் . 106 லட்சம் ஹெக்டரிலிருந்து 145 லட்சம் ஹெக்டர் பரப்பளவிற்கு சகுபடிபரப்பு பறந்து விரிந்தது குறித்தும். 185ந்து நதிகளை இணைத்ததன் மூலமாக எப்படி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது , இதன் மூலம் விவசாயத்துக்கான மின் நுகர்வு 45 சதவிதத்தில் இருந்து 22 சதவிதமாக அதிரடியாக குறைந்தது என்பது குறித்தெல்லாம் பேசி அவர் ஒரு விவசாய துறை பேராசிரியராகவே மாறியிருக்கலாம்
அரசியலையும் தாண்டி பேசுவதற்கு அவரிடம் ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது . அதை கேட்பதற்கு பலாயிரம் பலாயிரம் மாணவர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். வார்டனின் தடைகள் எல்லாம் தர்க்காலிக மானதே, . தர்க்காலிக தடைகள் எல்லாம் தகுதியற்றவனுக்கு வேண்டுமானால் தலையை கொய்யும் பலி கற்க்களாக இருக்கலாம். ஆனால் மோடிக்கோ அது பாராளுமன்றத்துக்கு பாதை அமைத்து தரும் படி கற்க்களாக தான் இருக்க முடியும். இதை அமெரிக்க வார்டன் அறிந்ததோ இல்லையோ டெல்லி ஸ்ரீராம் கல்லூரி நன்கே அறிந்துள்ளது.
தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.