தமிழகம் முழுதும் இளைஞர்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என பலர் இலங்கை தமிழர்களுக்காக களம் இறங்கியுள்ளனர்.
குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இதில் மிகப் பெரும்பான்மையாக பங்கெடுக்கின்றனர். கொதிக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாதவாறு அவர்கள் உண்ணா நோன்பு இருப்பது மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஓட்டு பொறுக்கிகளாகிய பல அரசியல் கட்சிகள் இலங்கை தமிழர்களுக்காக போராடுவதை குறித்து சாதக பாதகங்களை கணக்கிட்டு வரும் இந்த காலக் கட்டத்தில், மாணவர்களின் போராட்டம் மட்டுமே இலங்கை தமிழர்கள் மீது எந்த வித எதிர்பார்பில்லாத ஒரு நேர்மையான பாசப் பினைப்பினை காட்டுகிறது.
மாணவர்கள் அமேரிக்க தீர்மானம் தோல்வியுற்றால் சில யுக்திகளை கையாளப் போவதாக சில செய்திகள் வந்தன. அதில் என்னை கவர்ந்த ஒன்று
"அமேரிக்க பொருட்களை குறிப்பாக குளிர் பானங்களை புறக்கனிப்பது."
இது ஒரு அருமையான ஜனநாயக முறை. இலங்கை தமிழர்களுக்காக மட்டும் இல்லை, இதில் தேச பக்தியும் கலந்திருப்பதால் அதை முன்மொழிவது அனைவருக்கும் நல்லதுதான்.
குறிப்பாக அமேரிக்க குளிர்பானங்களை புறக்கனித்தல் என்பது அனைவரும் செய்யக் கூடியது. அமேரிக்காவை சேர்ந்த இரு பெரும் குளிர்பானங்களும் இன்று இந்தியாவையே ஆள்கின்றன. தங்களின் சூழ்ச்சி மிகுந்த வியாபார அனுகுமுறையாலும், பன பலத்தாலும் அவ்விரு குழுமங்களும், உள்ளூர் சிறு குளிர்பான குழுமங்களை விழுங்கி விட்டன. எஞ்சியவைகளை நசுக்கியும் விட்டன. இன்று 115 கோடி மக்களின் தாகத்தை தனிக்க கூடியது இந்த இரு கம்பனிகளில் ஏதோ ஒன்று தான் எனும் நிலை வந்துவிட்டது.
இந்த குளிர்பானங்கள் உண்மையில் என்னவென்று பார்த்தோம் என்றால் வெறும் "கார்பனேட்டட் தண்ணீர்தான்". வித விதமான மனங்களோடும், நிறங்களோடும் குளிர்படுத்தப்பட்ட இந்த பானங்களில் வேறு எதுவுமே பெரிதாக இல்லை. நம் நாட்டு தண்ணீரை எடுத்து நமக்கே விற்று லாபத்தை அள்ளிக் கொள்ளும் இந்த அமேரிக்க சிந்தனையை தவறு சொல்வதா, இல்லை கோடிக்கணக்கான டாலர் பட்ஜெட்டில் அவர்கள் இடும் விளம்பரங்களை பார்த்து அந்த பானங்களை குடிக்கும் நம் மக்களின் முட்டாள்தனத்தை எண்ணி மனம் வருந்துவதா ?
ஏன் இத்தனை கோடிகளை விளம்பரத்தில் செலவு செய்கிறார்கள் ? ஏனென்றால் அடிப்படையாக அதில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த தரமான பொருளும் கலக்கப் படுவதில்லை. ஆகையால்தான் ஒவ்வொரு பொருளுக்கும் பின்புலமாய் ஒரு கருத்தை (கான்செப்ட்) வைக்கிறார்கள். உதாரணத்திற்கு "மவுன்டன் ட்யூ" குடிப்பவர்கள் தைரியமானவர்கள், "ஸ்ப்ரைட்" குடிப்பவர்கள் நேருக்கு நேர் பேசி பெண்களை கவரக் கூடியவர்கள் என்று ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். நம் மாணவர்களும் இந்த கருத்தில் புதைந்து போய், இந்த கார்பனேட்டட் நீரை, மெல்ல மெல்ல உறிஞ்சிக் குடிப்பதை ஒரு ஸ்டைலாக பாவித்துக் கொள்கிறார்கள்.
இந்த இரு கம்பெனிகளின் குளிர்பானங்கள் மிக அற்புதமாய் கழிவறைகளை சுத்தமாக்க பயன்படும் என்றும் அவற்றில் கலந்துள்ள நச்சு பொருட்களை பற்றியும் இனையத்தில் நிறைய செய்திகள் வந்து இருக்கின்றன. இருந்தாலும் நம் மக்கள் அதை பற்றி வருந்தாமல், அவற்றை பருகுவது என்பது ஒரு "ஸ்டைல் ஸ்டேன்ட்மென்ட்" என்பது போல் பாவிக்கிறார்கள்.
எது எப்படியோ, கச்சா எண்ணை மற்றும் உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள் போன்ற முக்கியமான விடயங்களுக்கு நம் அந்நிய செலாவனி செலவழிந்தால் பரவாயில்லை. நாம் பருகும் ஒவ்வொரு பாட்டில் கார்பனேட்டட் நீரிலும், நம்முடைய அந்நிய செலாவனி வீணாவதை நாம் தடுக்காமல் இருக்கலாமா ?
இனி ஒவ்வொரும் முறை நீங்கள் இவற்றை பருக நேர்ந்தால் அதன் விலையில் ஒரு நாற்பது சதவீதத்தை நீங்கள் அமேரிக்காவுக்கு தருவதை நினைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் இதை அனைவருக்கும் பகிருங்கள்.
எத்தனை ஏழ்மை உள்ளது இந்த நாட்டில் ?
Thanks; Enlightened Master
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.