ஊழல்போன்ற, முறைகேடான செயல்களின் முலமாக சம்பாதித்து பெரும் சொத்து சேர்த்த , 20 அதிகாரிகள் மற்றும் கிரிமினல்களின் சொத்துகளை பறிமுதல்செய்யும் நடவடிக்கையை, பீகார் மாநில அரசு தொடங்கி யுள்ளது .
வருமானத்துக்கு அதிகமாக லஞ்சம் , ஊழல் உள்ளிட்ட முறைகேடான செயல்களின் மூலம் சேர்த்தசொத்துகளை பறிமுதல்செய்யும் சட்டத்தை, பீகாரை ஆளும், ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அரசு இயற்றியுள்ளது.
அதன் படி சென்ற ஆண்டு இரண்டு பேரின் சொத்துகள், அரசால் பறிமுதல் செய்யப்பட்டன. 9பது ஆண்டுகளாக, “இந்திரா அவாஸ் யோஜனா’ எனும் மத்திய அரசின் திட்டநிதியை, 30 கோடி ரூ அளவுக்கு சுருட்டிய, இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களது சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த வரிசையில், இந்த வருடம் , 20 ஊழல் வாதிகளின் சொத்துகளை முடக்க, பீகார் அரசு முன்வந்துள்ளது. இதில் ஆறு, அரசு அதிகாரிகளின் வீடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் பலரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என எதிர்பார்க்க படுகிறது.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.