மேற்குவங்க மாநில தொழில் துறையினரின் அழைப்பை ஏற்று அம்மாநில தலை நகர் கொல்கத்தாவில் ஏப்ரல் 9ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பங்கேற்க்கிறார்.
பொதுவாக நரேந்திர மோடியை இதர மாநில தொழில் துறையினர் ஒரு முன் மாதிரியாக கருதி அவரது நிர்வாக அனுபவங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றனர் .
மேற்கு வங்கத்தின் சிங்கூரில் கடந்த 2008ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தின் நானோதொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் பெரும்போராட்டமாக உருவெடுத்தது. இதைத்தொடர்ந்து சிங்கூரிலிருந்து குஜராத் மாநிலம் சனானந்த் மாவட்டத்துக்கு டாடா நிறுவனத்தை இடம் மாற்ற நரேந்திர மோடி தேவையான உதவிகளை செய்தார்.
அண்மையில் ஹால்டியா பல்க் டெர்மினல் நிறுவனம் மேற்குவங்க அரசின் சட்ட ஒழுங்கு சரியில்லை, ஊழியர்களுக்கு போதுமான பணி பாதுகாப்பு இல்லை என கூறியிருந்தது.
இந்நிலையில் மேற்குவங்க தொழில் துறையினர் ஏப்ரல் 9-ந் தேதி கொல்கத்தாவில் நடத்தும் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற மோடிக்கு அழைப்புவிடுத்துள்ளது. இக்கூட்டத்தில் மேற்குவங்க தொழிலதிபர்கள் கலந்துகொள்கின்றனர்.
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.