மகத்தான சங்கரர் தோன்றினார். பதினாறு வயதுக்குள் அந்த பிராமண இளைஞன் தமது நூல்கள் அனைத்தையும் எழுதிமுடித்ததாகக் கூறப்படுகிறது. அந்த 16 வயது இளைஞரின் எழுத்துக்கள் இன்றைய நவீனஉலகின் வித்தை களாக உள்ளன, அந்த இளைஞரும் அதே போன்று ஆச்சரியமானவர். இந்தியாவின் அப்பழுக்கற்ற தூய்மையை
மீண்டும்கொண்டுவர அவர் விரும்பினார். அது அவ்வளவு சாதாரணமானவேலையா என்ன! சற்று எண்ணிப்பாருங்கள்.
வேதாந்தத்தின் மாபெரும் ஆச்சாரியார் சங்கரர். அவர் ஆழ்ந்த தர்க்க அறிவின் மூலம் வேதங்களிருந்து வேதாந்த_உண்மைகளை பிரித்தெடுத்தார். அதனை அடிப்படையாக கொண்டு ஞான நெறியை வகுத்தார். அதனைத் தமது விளக்க உரை வாயிலாக போதித்தார். பிரம்மத்தை பற்றி விளக்கங்கள் அனைத்தையும் ஒன்று படுத்தி, இருப்பதெல்லாம் எல்லையற்ற_உண்மை ஒன்றே என்பதை காட்டினார்.
மனிதன் முன்னேற்ற பாதையில் மெதுவாகச்செல்லும் போது, பல்வேறு தகுதிகளுக்கு ஏற்ப பல நிலைகள் தேவையே என்பதை தெளிவாக்கினார்.
ஆதி சங்கரர் தோன்றி வேதாந்த தத்து வத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினார்; அதைப் பகுத் தறிவுக்கு ஏற்புடைய ஒருதத்துவமாக செய்தார். உப நிடதங்களில் இருக்கும் வாதங்கள் பலஇடங்களில் சரியாக புரிய வில்லை. புத்தர் இந்துதத்துவத்தின் அறநெறிப் பகுதியையும், சங்கரர் அறிவுப்பகுதியையும் வற்புறுத்தினார்கள். சங்கரர் அத்வைதத்தின் அற்புத மான, கோர்வையான முறையை நன்காராய்ந்து, அறிவு பூர்வமாக மாற்றி மக்களுக்கு கொடுத்தார்.
சாஸ்திரங்களை புறக்கணிக்காமலேயே முக்திக்குவழி காட்டியது சங்கரர் சாதித்த அருஞ் செயல்.
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.