போஃபர்ஸ் ஊழல் வழக்கை சிபிஐ மழுங்க செய்துவிட்டது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் L .K அத்வானி குற்றம் சுமத்தியுள்ளார,
கெளஹாத்தியில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது ,
இதில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் L .K அத்வானி பங்கு கொண்டு பேசியதாவது ,
போஃபர்ஸ் ஊழல் விவகாரம் உலக அளவில் நமது நாட்டினுடைய புகழுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது . போஃபர்ஸ் ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளி குவாத்ரோச்சியுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. சோனியா காந்தி வீட்டில் குவாத்ரோச்சி சாதாரணமாக வந்து செல்லும் செல்வாக்கு மிக்க நபராக இருந்து வந்துள்ளார் ,
இந்த ஊழல் விவகாரத்தில் குவாத்ரோச்சி கமிஷன்தொகை பெற்றதை வருமானவரி தீர்ப்பாயம் கூட சுட்டி காட்டியுள்ளது. ஆனால், மத்திய அரசு போஃபர்ஸ் வழக்கை சிபிஐ மூலமாக கமுக்கமாக மழுங்க செய்துவிட்டத,
மக்கள் அனைவருக்கும் இது தெரியும் . போஃபர்ஸ் ஊழல் நமது நாட்டினுடைய புகழுக்கு களங்கத்தை உருவாக்கியுள்ளது. எனவே, போஃபர்ஸ் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மேல் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என பிரதமரை கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்தார் .
{qtube vid:=uNBjm-fH8Sg}
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.