நரேந்திரமோடியின் மதச்சார்பற்ற தன்மைக்கு, நிதிஷ்குமார் சான்றிதழ் கொடுக்கவேண்டிய அவசியமில்லை என்று , பா.ஜ.க., கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து பா.ஜ.க., செய்திதொடர்பாளர், மீனாட்சிலோகி கூறியதாவது: நரேந்திர மோடியின் மதச்சார்பற்ற தன்மைக்கு, நிதிஷ்குமார் உட்பட, எவரும், சான்றிதழ் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. குஜராத்தில், கோத்ரா ரயில்எரிப்பு சம்பவம் நடந்த போது, மத்தியில், வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில், நிதிஷ்குமார், ரயில்வே அமைச்சராக இருந்தார், என்பதை மறந்து விடக்கூடாது. இன்னும், அவர், தே.ஜ.,கூட்டணியில் தொடருகிறார்.என்று மீனாட்சி லோகி கூறினார்.
பீகார் மாநில பா.ஜ.க, தலைவரும், அம்மாநில துணைமுதல்வருமான, சுஷில்குமார் மோடிகூறுகையில், கூட்டணி கட்சியைசேர்ந்த தலைவரை, ஐக்கிய ஜனதா தளம் விமர்சிப்பதை, ஏற்கமுடியாது. இது போன்ற விமர்சனங்கள், கூட்டணியை பலவீனமாக்கிவிடும், என்றார்.
பஞ்சாப் முதல்வரும், சிரோன்மணி அகாலிதளம் கட்சி தலைவருமான, பிரகாஷ்சிங் பாதல் கூறியதாவது: தே.ஜ.,கூட்டணியில், நாங்களும் அங்கம்வகிக்கிறோம். கூட்டணியில், முதன்மையான கட்சி, பா.ஜ.க தான். எனவே, பிரதமர்வேட்பாளர் தொடர்பாக, அந்தகட்சி சார்பில், எந்தமுடிவு எடுக்கப்பட்டாலும், அதை நாங்கள் ஆதரிப்போம். ஆனால், அது குறித்த முடிவை எடுப்பதற்கு முன்பு , தே.ஜ.,கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைகூட்டி, ஆலோசிக்கவேண்டும்.என்று . பிரகாஷ்சிங் பாதல் கூறினார்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.