நரேந்திர மோடி பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர்வேட்பாளராக முன்னிலை படுத்தப்படுவாரா? என்பதை, பா.ஜ.க.,வின் பாராளுமன்றகுழு உரியநேரத்தில் முடிவுசெய்யும் என்று பா.ஜ., கட்சியின் செய்திதொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசேன் கருத்து தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் இது குறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ; 2014-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்றதேர்தலுக்கு கூட்டணி அமைப்பதில் பா.ஜ.க வியூகம்வகுத்து வருகிறது. பா.ஜ.க தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மேலும் பலகட்சிகள் சேர உள்ளன. அந்தகட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடந்துவருகிறது. அந்த கட்சிகளின் பெயர்களை சொல்ல எனக்கு அதிகாரமில்லை. இப்போது வரை மம்தாபானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற வில்லை.
3வது அணி என சொல்பவர்கள் பகல்கனவு காண்கிறார்கள் என்று தான் சொல்வேன். 2014-ம் ஆண்டு பாராளுமன்றதேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணிக்கும் இடையில்தான் போட்டி.
நரேந்திரமோடி பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர்வேட்பாளராக முன்னிலை படுத்தப்படுவாரா? என்பதை, பா.ஜ.க.,வின் பாராளுமன்றகுழு உரியநேரத்தில் முடிவு செய்யும். ஆனால், காங்கிரஸ் கட்சியின் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை அந்த கட்சி தெரிவிக்க மறுத்துவருகிறது.
நரேந்திரமோடி விவகாரத்தால், பீகாரில், ஆளும் ஐக்கிய ஜனதாதளம் பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்துமில்லை. அங்கு கூட்டணி தொடர்ந்து நீடிக்கிறது. கூட்டணிதொடர்பாக இருகட்சிகள் இடையே இப்போதைக்கு எந்த தகராறுமில்லை. என்று அவர் தெரிவித்தார்.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.