கூட்டணிக் கட்சிகளை ஒற்றுமையாக வைத்திருப்பதே எங்களது பிரதானநோக்கம் என்று பாஜக. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; நாங்கள் (பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம்) இணைந்தே மக்களவை தேர்தலை சந்திப்போம் என்று நம்புகிறேன். நிலைமை மோசமடைந்து விடவில்லை. பிரச்னைகள் பற்றி அவர்களுடன் நாங்கள் விவாதிப்போம். இப்போது ஏற்பட்டநெருக்கடி (கருத்து வேறுபாடு) துரதிருஷ்ட வசமானது. ஆனால், ஒரு கூட்டணிக்கட்சி விலகிச்செல்வதை பாஜக. விரும்பாது. நாங்கள் ஒன்றாகஅமர்ந்து பேசி, பிரச்னைகளை தீர்ப்போம். கூட்டணி கட்சிகளை ஒற்றுமையுடன் வைத்திருப்பதே எங்கள் பிரதானநோக்கம் கூட்டணி கட்சிகளுக்கு என தனிக்கொள்கைகள், அரசியல் சிந்தனைகள், திட்டங்கள் ஆகியவை உள்ளன. அவை பாஜக.விடமிருந்து மாறுபடலாம். ஐக்கிய ஜனதா தளம் கோரியதுபோல் தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை அறிவிப்பீர்களா? என கேட்கிறீர்கள். எல்லா விசயங்களையும் இப்போது வெளிப்படையாக கூறமுடியாது.
எனினும், தேர்தலுக்குப் பிறகு தனிப்பெரும் கட்சியாக பாஜக. உருவெடுக்கும் பட்சத்தில், எங்களுக்கும் கூட்டணிக்கட்சிகளுக்கும் இடையில் எந்த சிக்கலும் இல்லாமல் தவிர்க்க முயற்சி செய்வோம். அனைத்து விஷயங்கள் குறித்தும் அவர்களுடன் விவாதிப்போம். எங்கள் கூட்டணிக் கட்சிகளை இழக்க விரும்பவில்லை. யார் பிரதமர் வேட்பாளர் என்பது பற்றி கட்சியின் ஆட்சி மன்றக்குழுதான் இறுதி முடிவெடுக்கும்.
அனைத்து கூட்டணி கட்சிகளும் எங்களுடன் நீடிப்பதையே விரும்புகிறோம். “எந்தவினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு’ என்று கூறி குஜராத்கலவரத்தை நியாயப்படுத்த மோடி முயன்றதாக கூறப்படுகிறது. அவர் அப்படிக்கூறினாரா என்பது தெரியவில்லை. எந்த முதல்வரும் தனது மாநிலத்தில் கலவரம் நடப்பதை விரும்பமாட்டார். அவர் கலவரத்தை தூண்டியதாக யாரும் கூறமுடியாது.
கட்சியின் ஆட்சி மன்றக்குழுவில் மோடியை சேர்த்தது சரிதான். கட்சியின் மூத்தமுதல்வர் என்பதாலும் ஓரிடம் மட்டுமே குழுவில் காலியாக இருந்ததாலும் அதற்கு அவர் நியமிக்கப்பட்டார். மோடி மதச்சார்பற்றவர் தான் என்றார்.
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.