மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் வரைவு அறிக்கையை சாக்கோ தயாரித்துள்ளார்

 மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில்  வரைவு அறிக்கையை சாக்கோ தயாரித்துள்ளார் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் 2வது பகுதி இன்று தொடங்க உள்ள நிலையில், 2ஜி அலைக்கற்றை தொடர்பான ஜே.பி.சி வரைவுஅறிக்கை, நிலக்கரி ஊழல் , தில்லியில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் போன்றவை குறித்து நாடாளுமன்றத்தில் பா.ஜ.க பிரச்னை எழுப்பும்” என பா.ஜ.க தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார் .

தில்லி துவாரகாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுவிவகாரத்தை விசாரித்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் (ஜேபிசி) இறுதிவரைவு அறிக்கையை அதன் தலைவர் பிசி. சாக்கோ தயாரித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அலைக் கற்றை விவகாரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோரின் நற்பெயருக்கு களங்கம்ஏற்படுத்தும் வகையில் சிலகருத்துகளை அவர் பதிவுசெய்துள்ளார்.

வாஜ்பாய் தலைமையில் மத்தியில் ஆட்சி நடைபெற்ற போது அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. 48,000கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வரைவுஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜஸ்வந்த்சிங், அருண்ஷோரி ஆகியோரின் பெயரையும் இந்த விவகாரத்தில் சேர்த்துள்ளார்.

அரசியல்வாழ்வில் அப்பழுக்கற்ற நற்பெயரைபெற்றுள்ள வாஜ்பாய் மீது களங்கம்கற்பிக்க நினைத்தால் பா.ஜ.க சும்மாயிருக்காது. மத்தியில் ஆட்சியை தக்கவைத்து கொள்ளவும், மக்களை தவறாக வழிநடத்தும்நோக்கிலும் வரைவு அறிக்கையை சாக்கோ தயாரித்துள்ளார். இந்தஅறிக்கை குறித்து கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுடன் அவர் ஆலோசிக்கவில்லை. இந்த அறிக்கையை நிராகரிக்கவேண்டும் என்று மற்ற ஜே.பி.சி உறுப்பினர்களை தேசியஜனநாயக கூட்டணியும் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து 25-ம்தேதி நடைபெறும் ஜே.பி.சி கூட்டத்தில் கேள்வி எழுப்புவோம் .அலைக்கற்றை வழக்கில் முக்கியகுற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் மத்தியஅமைச்சர் ஆ. ராசா, தன்னை ஜேபிசி முன்பு ஆஜராக அனுமதிக்கவேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும் நிராகரித்துள்ளனர் .

அலைக்கற்றை விவகாரத்தில் பிரதமர் , மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரை விசாரிக்கவேண்டும் என்று ஜேபிசி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதையும் கண்டு கொள்ளாமல் இருவருக்கும் வரைவு அறிக்கையில் நற்சான்று வழங்கியுள்ளார் சாக்கோ என்றார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

வெளியானது பாஜக மாவட்ட தலைவர் பட ...

வெளியானது பாஜக மாவட்ட தலைவர் பட்டியல் – அண்ணாமலை வாழ்த்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கான பா.ஜ., தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ...

ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறு ...

ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது : மங்கீ பாரத் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம் ''நம் நாட்டின் தேர்தல் நடைமுறைகள் குறித்து சிலர் சந்தேகம் ...

தமிழகத்தில் சமூக விரோதிகளுகக் ...

தமிழகத்தில் சமூக விரோதிகளுகக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது – அண்ணாமலை  குற்றச்சாட்டு 'தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது' ...

கோ கோ முதல் உலகக்கோப்பையை வென்ற ...

கோ கோ முதல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கோ கோ முதல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிகளுக்கு ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...