சீன ஊடுருவல் விவகாரத்தில் இந்தியஅரசு கோழைத்தனமாக நடந்து கொள்கிறது. பாகிஸ்தானை விட சீனாதான் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி என்று முலாயம்சிங் யாதவ் மக்களவையில் பேசியுள்ளார் .
இது குறித்து அவர் மேலும் பேசியதாவது ;
இந்தியாவின் மிகப்பெரிய எதிரி நாடு சீனாதான். சீனா நம்நாட்டுக்குள் ஊடுருவி சிலபகுதிகளை ஆக்கிரமித்து வருகிறது என்று நாங்கள் பலமுறை எச்சரித்தும் . இந்த அரசு அதை காதில் போட்டுக்கொள்ளவேயில்லை.ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கைஎடுக்க இந்திய ராணுவம் தயாராகவே உள்ளது. ராணுவ வீரர்கள் தயார்நிலையில் இருப்பதாக தளபதி கூறியிருக்கிறார். ஆனால் எந்தவித நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.
1962-ஆம் ஆண்டில் சீனா நம்மை அவமான படுத்தியது. இப்போதும் நம்மை அவமானப்படுத்துகிறது.
இந்திய எல்லைப்பகுதியில் ஒருலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆனாலும் மத்தியஅரசு எந்த எதிர் நடவடிக்கையையும் எடுக்க முயற்சிக்க வில்லை.
இந்த அரசு உரிய நடவடிக்கை ஏதும் எடுக்காத, எதற்கும் உதவாத, கோழைத் தனமான அரசு இது. இந்த விவகாரத்தை பற்றி முழுவிவரத்தையும் நாடாளுமன்றத்தில் அரசு தெரிவிக்கவேண்டும். பாகிஸ்தானை விட சீனாதான் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி என முலாயம்சிங் யாதவ் பேசினார்.
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.