தேவை இந்திய ஜப்பானிய இராணுவ ஒத்துழைப்பு.

தேவை இந்திய ஜப்பானிய இராணுவ ஒத்துழைப்பு. சீனா தன் துருப்புக்களை பாரத்தின் எல்லைக்குள் அனுப்பி கூடாரமடித்துத் தங்கியுள்ளது. இதற்குச் சீனா கூறும் காரணம் இந்தியா தன் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டது ஆகவே அந்நிலப்பரப்பை மீட்டெடுக்கிறோம் என்பதே. சுப்பிரமணியன் சுவாமி சீன ஆக்கிரமிப்பு மற்றும் இந்தியா

மீதான் சீனக் குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு அறிக்கை தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார். மன்மோகன் அரசு இது நிலத் தகராறு என்பதற்கு மேல் ஏதுமில்லை என்பது போலச் சும்மா இருக்கிறது.

சீனா ஆக்கிரமித்தது ஆக்கிரமிப்பு எண்ணத்தில் இல்லை என்று மைய அரசு ஆரூடம் சொல்கிறது. சீனத்தின் எண்ணம்/செயல்கள் குறித்து வக்காலத்து வாங்க கம்யூனிஸ்டுகள் இருக்கிற போது மைய அரசுக்கு அதைச் செய்ய என்ன அழுத்தம் என்பது ஆராய்ச்சிக்குரிய கேள்வி. அரசு மறுத்தாலும் இராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கை வல்லுநர்கள் சீனத்தின் செயல் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அல்ல என்றே கருதுகிறார்கள்.

சல்மான் குர்ஷித் சீனா போய்ப் பேசுவார் என்று அரசு சொல்கிறது. சீனத்தின் செயலுக்கு வரிந்துகட்டி வக்காலத்து வாங்கிய பின் பேச என்ன இருக்கிறது என்பது புரியவில்லை.

இந்நிலையில் சீனா கீழ்ச்சீனக் கடல் பகுதியில் ஜப்பானைச் சீண்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஜப்பானியப் பிரதமர் ஷென்ஸோ ஏப் சீண்டாதே என்று சீறுகிறார். சென்காகு-டயோயஸ் பகுதியில் அவர் சீறுவதால்தான் சீண்டலே நடக்கிறது என்கிறது சீனா. அப்பகுதிகளில் கூடுதலாக  கடற்படை மற்றும் விமானப்படை ரோந்துகளை சீனா அதிகரித்துள்ளது.

பொதுவாக இருநாடுகளுடன் இரு முனைகளில் ஒரு நாட்டுக்கு எல்லைப் பிரச்சினை இருந்தால் ஒவ்வொன்றாக பேச்சுவார்த்தையிலோ அல்லது வேறு வகைகளிலோ தீர்த்துக் கொள்வது வழக்கம். இரு எதிர்ப்பு நாடுகளும் கூட்டுச் சேர்ந்து கொண்டால் பிரச்சினை விஸ்வரூபமெடுக்கும் என்பதால் இந்த வழக்கம்.

ஆனால் சீனா அதீத நம்பிக்கையில் அங்கங்கே விளையாடிப் பார்க்கிறது. நம் அரசு கம்யூனிஸ்டு ஆதரவு வேண்டுமே என்று சீனாவை இழுத்து மூடுகிறது. ஆனால் ஜப்பான் ரஷ்யாவுடனான தன் எல்லைப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை துவக்கியிருக்கிறது. சீனம் சீண்டும் போது பிறர் அதனுடன் சேரக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வே காரணம்.

இந்திய ஜப்பானிய இராணுவ புரிந்துணர்வுகள் இன்றைய நிலையில் சீனத்தைச் சமாளிக்க உதவும். சீனத்துடன் எல்லை உள்ளிட்ட விஷயங்களில் சண்டைக்கட்டத் தயாராகும் எந்த நாட்டுடனும் சற்றே இணக்கம் காட்டுவது நமக்கு நல்லது. நம் தேசநலன் இதில் வலுப்படும். சீனம் தந்த துணிவில் தான் இலங்கை நம்மை உதாசீனப்படுத்துகிறது. பாகிஸ்தானும் சீனத்தின் ஆதரவில் நம்மோடு மோதுகிறது.

ஆகவே இன்றைய நிலையில் சீனத்தைச் சற்றே அடக்க ஜப்பானுடன் புரிந்துணர்வுகளை வலுப்படுத்துவது முக்கியம் என்பதே பாதுகாப்பு மற்றும் அயலுறவு வல்லுநர்களின் ஏகோபித்த கருத்து. செயல்படுத்த தேசநலன் நாடும் தலைமை வேண்டும். அடுத்த தேர்தல் 2014 வரை சீனம் காத்திருக்காது. நாம் மன்மோகன் அரசுக்குத்தரும் அழுத்தத்திலேயே நம் நலம் காக்கப்படுமா அல்லது காற்றில் பறக்குமா என்பது முடிவாகும்.

நன்றி; அருண்பிரபு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...